தமிழ் சினிமாவில் கலக்கியதை தொடர்ந்து அனிருத்திற்கு தற்போது தான் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரான பவன் கல்யாண் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அங்குள்ள பல இளம் நாயகர்கள் தங்கள் படங்களில் அனிருத்தை கமிட் செய்ய சிபாரிசு செய்கிறார்களாம்.
ஆனால் அனிருத்தோ தன்னை தேடிவரும் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 3 கோடி வரை பில் போடுகிறாராம். இதனால் பல தயாரிப்பாளர்கள் அனிருத்தை கண்டால் தெரித்து ஓடுவதாக கூறப்படுகிறது.