அவளின் மரணத்தை நான் பார்க்க வேண்டும்: கணவன் செய்த வெறிச்செயல்

245

அமெரிக்காவில் தனது முன்னாள் மனைவியை கொலை செய்துள்ள கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Shaun Hardy, Anne-Christine Johnson தம்பதியினருக்கு திருமணமாகி ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.

இருப்பினும் குழந்தையானது தாயார் Anne- யின் வசம் இருந்ததால், தனது குழந்தை தனக்கு வேண்டும் என Hardy சண்டையிட்டுள்ளார். குழந்தை விவகாரம் தொடர்பாக இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி டெக்ஸாஸில் வசித்து வந்த தனது கணவனை பார்ப்பதற்காக Anne சென்றுள்ளார். அதன் பின்னர் 3 வாரங்கள் ஆகியும் Anne – ஐ காணவில்லை.

இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, Hardy வீட்டினை சோதனை செய்ததில் Anne கைப்பேசி அங்கு பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Hardy பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, எங்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்தது. அவள் இறப்பதை என் கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அதன்படியே எனது வீட்டுக்கு வந்த அவளுடன் எனக்கு சண்டை ஏற்பட்டது. அதன் இறுதியில் அவளை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை எனது வீட்டின் பின்புறத்தில் புதைத்தேன்.

இதனை யாரும் கண்டுபிடிக்காமல் இருப்பதற்கு புதைத்த இடத்தில் அமோனியாவை போட்டு சரிசெய்தேன் என கூறியுள்ளார்.

தற்போது இவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE