இங்கிலாந்தில் அமைந்துள்ள ரகசிய பாதாள நகரம்…! அமைக்கப்பட்டதன் பின்னணி என்ன..?

234
 

திட்டமிட்ட அடிப்படையில், அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு நகரமாக அமைப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியம் கிடையாது. ஏனெனில், சாதாரண கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கே இரண்டு ஆண்டுகள் கடந்து செல்கின்றன.

அப்படியிருக்க, பூமிக்கு அடியில் பல் வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய பாதாள நகரம் ஒன்றை அமைத்து, சுமார் 30 ஆண்டு காலம் மக்களின் பாவனையில் இருந்துள்ளது என்றால் நம்பவா முடிகின்றது.

அப்படிப்பட்ட பாதாள ரகசிய நகரமே இங்கிலாந்தில் அமைந்துள்ள பர்லிங்டன் நகரமாகும். 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 35 ஏக்கர் பரபரப்பளவில் இந்த நகரம் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கும் இடையில் நடந்த பனிப்போர் காலப்பகுதியில் அணுகுண்டு தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இந்த நகரம் அமைக்கப்பட்டது.

இந்த பாதாள ரகசிய நகரத்தில் வைத்தியசாலை, உணவகங்கள், அலுவலகங்கள் என ஒரு நகரத்திற்கு காணப்படவேண்டிய அனைத்து விடயங்களும் உள்வாங்கப்பட்டிருந்தன.

மேலும், குடிநீர் தேவைக்காக தற்காலிகமாக ஏரியுடன், காற்றின் ஈரப்பதம் குறையாதவாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இந்த நகரில் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

வெடி குண்டுகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதாள நகரம் குறித்து அந்நாட்டு மக்கள் கூட அறிந்திருக்கமாட்டார்கள்.

சுமார் 30 ஆண்டு காலம் மக்கள் பாவனையில் இருந்த இந்த பாதாள நகரம் 1991ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்காலத்தில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் இந்த பாதாள நகரத்தை மீண்டும் புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவரும் திட்டத்தை இங்கிலாந்து அரசு கைவசம் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE