தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள் 11 வருடங்களின் பின் வைத்தியசாலையிலிருந்து சிறுவர் இல்லத்துக்கு!!

216

இந்தியாவில் ஒட்டிப் பிறந்த இரு சகோதரிகள் 11 வருடங்களுக்கு மேலாக வைத்தியசாலை ஒன்றில் தங்கியிருந்த நிலையில், சிறுவர் இல்லமொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வீணா, வாணி எனும் இச்சகோதரிகள் 14 வயதானவர்கள். இவர்கள் பிறக்கும் போது இருவரின் தலைகளும் ஒன்றுட னொன்று ஒட்டியி ருந்தன. கடந்த 11 வருடங்களாக இவர்கள் ஹைதராபாத் நகரிலுள்ள வைத்தியசாலை யொன்றிலேயே தங்கியிருந்தனர்.

சிறிய அறையொன்றில் நீண்ட காலமாக தங்கியிருந்ததால் சுகாதார பிரச்சினைகளை இவர்கள் எதிர்கொண்டனர். வீணாவும், வாணியும் தங்க வைக்கப்பட்டிருந்த சிறிய அறையில் பொருத்தப்பட்டிருந்த வாயு சீராக்கி முறையாக இயங்கவில்லை எனவும், காற்றோட்ட வசதி இல்லாததால், இச் சிறுமிகள் தோல் நோய்கள் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தொண்டர் நிறுவனங்கள் தெரிவித் திருந்தன.

இந்நிலையில், இச் சகோதரிகள், அரசாங்கத்தினால் நடத்தப்படும் சிறுவர் விடுதி யொன்றுக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டனர். இதன்மூலம் இச் சகோதரிகள் ஆரோக்கியமான சூழலில் வாழ்வ தற்கும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நீண்ட காலமாக தாம் தங்கியிருந்த வைத்தியசாலையிலிருந்து வெளியேறிச் செல்வது இச்சகோதரிகளுக்கும் வைத்திய சாலை ஊழியர்களுக்கும் மனோரீதியில் கடினமானதாகவே இருந்ததாம்.

இச் சகோதரிகளுக்கு ஒரு வருடமாக கல்வி போதித்த ஆசிரியையான வி.அனூஷா கூறுகையில், ‘இந்த இரட்டையர்களுடன் நான் உணர்வு பூர்வமாக பிணைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் என்னை தமது மூத்த சகோதரியாக கருதினர்’ எனத் தெரிவித்துள்ளார்.

இச் சிறுமிகள் மிகுந்து புத்திகூர்மையானவர்கள். அவர்களில் ஒருவர் மிக சிறப்பாக பாடுகிறார் என சிறுவர் இல்லத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE