கனடாவில் தனிமையில் அலைந்து திரிந்த தமிழ் பெண்..!

231

 

கனாடா மார்கம் ஒன்ராறியோ, பகுதியில் தனிமையில் அலைந்து திரிந்த தமிழ் பெண் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர்.

80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு அந்நாட்டு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கோவான் வீதி டவுன்லி அவனியு மற்றும் ஹைகிளென் அவனியு பகுதியில் இருந்து குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண் தரையில் வீழ்ந்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் பொலிஸார், அவரின் பெயர் புவனேஸ்வரி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண் எந்த பகுதியில் இருந்து வந்தார் என அறியும் முயற்சியில் அந்நாட்டு பொலிஸார் தீவிரமான ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் அறிய கனடாமிரர் (canadamirror.com)

SHARE