ஜப்பானில் விளம்பர நிறுவனம் ஒன்றில் அதிக நேரம் வேலை பார்த்த இளம் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dentsu Advertisement agency என்பது ஜப்பானில் உள்ள மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஆகும்.
இங்கு பணியாற்றி வந்த Matsuri Takahashi (24) என்ற இளம்வயது பெண் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் தனது அலுவலகத்தில் 105 மணி நேரம் கூடுதல் வேலை பார்த்துள்ளார்.
இதன் காரணமாக இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த 28 ஆம் திகதி கூறியுள்ளதாவது, எனது உடல் நடுங்குகிறது, என்னால் இயல்பான வாழ்க்கை வாழமுடியவில்லை.
நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்….நான் இறக்கப்போகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அதிக வேலைப்பளுவால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது பிற ஊழியர்கள் முன்னிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், Dentsu நிறுவனம் வெளியிட்டுள்ள பதிலில், Matsuri என்ற பெண் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றியது உண்மைதான், ஆனால் அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதமே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.
ஜப்பானில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் அதிக நேரம் வேலை பார்க்கும் முறை அதிகமாக பின்பற்றப்படுகிறது. இரவு நேரங்களில் பணியாற்ற விரும்பாத போதிலும் பணப்பற்றாக்குறை காரணமாக சில ஊழியர்கள் இதுபோன்று அதிக நேரம் வேலை பார்க்கின்றனர்.
ஆனால், அதிக நேரம் வேலை பார்ப்பதை சில நிறுவனங்கள் தங்களது விதிமுறைகளாக பின்பற்றி வருவதால் ஊழியர்களும் இதனை பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பான் நாட்டு மக்கள் அதிக நேரம் வேலை பார்ப்பதாக அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
ஒரு மாதத்திற்கு மட்டும் 80 மணி நேரம் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் 49 மணிநேரம் மட்டும் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள். ஜப்பானில் 20 சதவீதம் பேர் அதிக நேரம் பணியாற்றுகிறார்கள் என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற அதிகமான வேலைப்பளு காரணமாக மன அழுத்தம், மாரடைப்பு நோய்கள் மற்றும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்ளும் இறுதி நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்படுகிறார்கள்.