உலக தமிழர் திருநாள் விழா இந்தியாவில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன், கல்வி அமைச்சின் ராஜாங்க செயலாளர் இராதாகிருஸ்ணன், உலக தமிழ் வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ. செல்வக்குமார் மற்றும் பல அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், தமிழ் மேதைகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்விக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: உலகத் தமிழர் திருவிழாவில் வலியுறுத்தல்
உலகத் தமிழர் திருவிழாவில் வெளியிடப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த நூலுடன் (இடமிருந்து) ஒசுலோ மாநகர துணை முதல்வர் கம்சாயினி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ
மலேசியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களின் கல்வியை மேம்படுத்த மத்திய அரசு, உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் உதவ வேண்டும் என சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் திருவிழாவில் வலியுறுத்தப்பட்டது.
உலக தமிழர் திருநாள், உலக தமிழ் வம்சாவளியினர் ஒன்று கூடும் நிகழ்ச்சி ஆகியவை சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியது:
உலகில் எந்தெந்த நாடுகளில் நல்ல கல்வி போதிக்கப்படுகிறதோ அங்குள்ள மக்கள் வளமுடன் உள்ளனர். மலேசியாவில் கடந்த 1957 -ஆம் ஆண்டில் 40 சதவீத தமிழர்கள் நல்ல கல்வியைப் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது அது 2 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
அந்த நாட்டில் வேலை வாய்ப்பு பெற்ற தமிழர்கள் 8 சதவீதம் உள்ளனர். ஆனால் சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது. பிற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு சிறந்த கல்வியும், வேலைவாய்ப்பும் இல்லாவிட்டால் அவர்களது நிலை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே சான்று. தமிழர்கள் வசிக்கும் 50 -க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ்ப் பள்ளிகளை அதிக அளவில் தொடங்க மத்திய அரசு, தமிழ் அமைப்புகள் உதவ வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன்: தமிழகத்தைச் சேர்ந்த 39 மக்களவை உறுப்பினர்களும் தமிழர்கள் நலன் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப வேண்டியது அவசியம். இன்றைய சூழலில் காசோலை என்று கூறினால் யாருக்கும் தெரிவதில்லை. “செக்’ என்று கூறினால்தான் புரிகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வழக்கில் உள்ள தமிழ் வார்த்தைகள்கூட காணாமல் போய்விடும். நம்மை வளர்த்தெடுத்த தமிழை உணர்வுடன் பேணிப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும்.
வானொலி தொகுப்பாளர் அப்துல் ஹமீது: குறைந்த மக்கள்தொகை கொண்ட பிரான்ஸ், நார்வே, ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் கூட உயர்கல்வியின் தரம் சிறப்பாக உள்ளது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் உயர்கல்வியின் தரம் குறைவாக உள்ளது.
அதை மேம்படுத்துவது அவசியம். மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்று மொழியை உலக வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் வகையில் புதிய செயலியை வடிவமைத்தல் போன்ற கண்டுபிடிப்புகளை தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டும்.
விழாவில் இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், ஓசுலோ மாநகர துணை முதல்வர் கம்சாயினி, இலங்கை எம்.பிக்கள் முத்து சிவலிங்கம், சிவமோகன், தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி, ஆவணப்பட இயக்குநர் ஆபிரஹாம் லிங்கன் உள்பட அமெரிக்கா, கனடா, நார்வே என பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கலந்து கொண்டனர்.