இந்தியாவில் உயிரிழந்த தன் மகளின் சடலத்தை வைக்க சவப்பெட்டியும், மயானத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்ம் மருத்துவமனை தர மறுத்ததால் தோளில் சடலத்தை தூக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தந்தை ஒருவர் தள்ளப்பட்டார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள பெச்சமுண்டி கிராமத்தை சேர்ந்த ஒரு நபருக்கு Sumi Dhibar (5) என்னும் மகள் உள்ளார்.
கடுமையான காய்ச்சல் காரணமாக Sumi வை அவர் தந்தை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார், அங்கு சிகிச்சை பலனில்லாமல் Sumi Dhibar உயிரிழந்துள்ளார்.
பின்னர் தன் மகளின் சடலத்தை வைக்க சவப்பெட்டியும், மயானத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியையையும் அவரின் தந்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
ஆனால் நிர்வாகம் அதை தர மறுத்ததால் மயானம் இருக்கும் 15 கிலோ மீட்டருக்கு மகள் சடலத்தை தோளில் வைத்து தந்தை எடுத்து சென்றுள்ளார்.
இதே ஒடிசாவில் சில மாதங்களுக்கு முன்னர் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் தன் மனைவி சடலத்தை ஒருவர் தன் தோளில் சுமந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.