உயிரை குடித்த வாலிபரின் சாகசம்

222

பிரான்ஸ் நாட்டில் ஓடும் ரயிலில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் உயரமான கட்டங்கள், கோபுரங்கள் மீது ஏறுதல், ஓடும் ரயிலின் கூரை மீது ஏறுதல் உள்ளிட்ட சாகச முயற்சிகளில் ஈடுப்பட வாலிபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால், பிரான்ஸ் நாட்டில் இதுபோன்ற ஒரு சாகச முயற்சி வாலிபர் ஒருவரின் உயரை குடித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த Nye Frankie Newman(17) என்ற வாலிபர் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் இதுபோன்ற ஒரு சாதனையை நிகழ்த்த முயன்றுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் தனது 9 நண்பர்களுடன் இணைந்து ஓடும் ரயிலின் கூரை மீது ஏற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், துரதிஷ்டவசமாக கூரை மீது ஏறியபோது கால் தவறி கீழே விழுந்து பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து ‘ரயில் மீது ஏறி அவர் விபத்துக்குள்ளாகவில்லை. மர்மமான காரணம் தொடர்பாக அவர் உயிரிழந்துள்ளார்’ என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவ்விபத்து குறித்து பேசிய ரயில் நிறுவன அதிகாரிகள் வாலிபரின் மரணத்தை பார்க்கும்போது அவர் நிச்சயமாக சாகசம் செய்யும் முயற்சியில் தான் உயிரிழந்துள்ளார்.

எனவே, இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுப்படுவதை தடுக்க காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE