ஒபாமா தன் நாட்டு மக்களுக்கு உருக்கமாக எழுதிய இறுதி கடிதம்

209

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து நாட்டு மக்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதியாக ஒபாமா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்காவில் ஒருவர் ஜனாதிபதியாக இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது.

இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டார். இவர் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியான ஒபாமா தன் நாட்டு மக்களுக்கு இறுதி கடிதம் ஒன்றை உருக்கமாக எழுதியுள்ளார்.

அதில், எட்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா அதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்றது. அப்போது உங்கள் முன்னால் தோன்றி, என்னால் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என உறுதியளித்தேன். என்னை நம்பி தேர்ந்தெடுத்தீர்கள். நான் உறுதியளித்த மாற்றங்களை உங்கள் துணையோடு நிறைவேற்றியுள்ளேன். அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்’ என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பு, தொழில் துறை முன்னேற்றங்கள் மற்றும் பொருளாதாரம் என அனைத்தையும் அதில் தெளிவாக குறிப்பிட்டு காட்டியுள்ளார்.

SHARE