மலச்சிக்கல், சிறுநீரகக்கல் நோய்களுக்கு தீர்வாகும் நார்த்தம்பழம்

172

எலுமிச்சை பழத்தின் வகையைச் சார்ந்த நார்த்தம் பழமானது, மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகற்கள் போன்ற பல பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்தகைய நார்த்தம் பழமானது, நன்கு கனிந்த பின் சாப்பிடுவதே உகந்தது. மேலும் இது காயாக இருக்கும் போது, ஊறுகாய் போன்று கூட செய்து சாப்பிடலாம்.

நார்த்தம் பழத்தில் அமினோ அமிலங்கள், விட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், விட்டமின் B, அஸ்பார்டிக் அமிலம் இது போன்ற ஏராளமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

நார்த்தம் பழத்தின் மருத்துவ குணங்கள்
  • நார்த்தம் பழத்தின் மலர்கள், மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இந்தக் கனியின் தோல் வயிற்றுப் போக்கை நிறுத்தும் தன்மைக் கொண்டது.
  • நார்த்தங்காயை அல்லது அதன் பழத்தை எந்த வடிவத்திலாவது, தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமடையும். வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழு இவை அனைத்து பிரச்சனையும் நீங்கி, பசியின் தன்மை அதிகரிக்கச் செய்கிறது.
  • நார்த்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதபேதி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
  • பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணிந்து புத்துணர்ச்சியாக இருக்கும்.
  • நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  • கர்ப்பிணி பெண்கள் தினமும் இரண்டு வேளைகள் நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்ணீரில் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு குடித்து வந்தால், சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.
  • வாயுத் தொல்லை அதிகமாக இருப்பவர்கள், நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.
SHARE