இளையதளபதி விஜய்யின் அம்மா ஷோபா இப்போது சினிமாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார். அதாவது படங்கள் பார்ப்பது, நடிகர்களை பாராட்டுவது என்று செய்து வருகிறார்.
ஜாம்பவான்கள் அனைவரும் பாராட்டும் விதமாக 21 வயதான நரேன் என்பவரின் இயக்கத்தில் வெளியான படம் துருவங்கள் பதினாறு. ரகுமான் நடித்திருந்த இப்படத்திற்கு பல பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்த வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த விஜய்யின் அம்மா ஷோபா அவர்கள் ரகுமான் அவர்களுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ரகுமான் பேசுகையில், இப்படத்தில் நடித்ததை பல பேர் போன் செய்து பாராட்டினார்கள். அதில் ஒருவரின் போன் கால் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது. விஜய்யின் அம்மா ஷோபா அவர்கள் போன் செய்து என் நடிப்பை பாராட்டினார்கள்.
முப்பது வருஷம் கழித்து என் நம்பரை தேடிக் கண்டுபிடிச்சு அவங்களை பேச வைத்தது இந்த படம்தான். அதுக்காகவே இப்படத்தின் இயக்குனர் நரேன் கார்த்திக்குக்கு நன்றி சொல்லணும் என்றார்.