சென்னையில் இந்தியா டுடே குழுமம் நடத்திய நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உட்பட பல்வேறு முக்கிய விஜபிக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னரே வந்துவிட்டார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து ஜெயலலிதாவின் காரில் வந்த சசிகலாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, மீடியாவின் நிர்வாகிகள் சசிகலாவிற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர், அப்போது முதல்வர் பன்னீர் செல்வம் ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டிருந்தார்.
அதன்பிறகு சசிகலாவை ஹொட்டலுக்குள் அழைத்து செல்லும்போது கூட, அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக அவர் நடந்துசென்றார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.