ஜெ. சொத்து யாருக்கு? வெளியான பரபரப்பு தகவல்

202

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி பேசக்கூடிய வார்த்தை மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்பது தான்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

அப்போது, வேட்பு மனு தாக்கல் செய்ததில், தனது சொத்து விபரமாக வங்கி டெபாசிட் 10.63 கோடி ரூபாய், பத்திர முதலீடு 27.44 கோடி, நகைகள் மதிப்பு 41.63 கோடி, நில மதிப்பு 72 கோடி மற்றும் வாகன விபரங்கள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைந்த பிறாகு அவருக்கு வாரிசு இல்லாத காரணத்தால் அவர் சொத்து முழுவதும் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

அப்போது, ஜெ.வின் சொத்துகள் முழுவதையும் அரசுடைமை ஆக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், மதுரை பொது நல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர், ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஜெ.,சொத்துகளை அடையாளம் கண்டு, விபரங்களை அறிக்கையாக, தாக்கல் செய்து அதன் அடிப்படையில், சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE