A9 வீதியில் கோர விபத்து!! மாணவர்கள் உட்பட 27 பேர் படுகாயம் – நால்வர் ஆபத்தான நிலையில்

152

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மஹவெல் – திம்புல்கமுவ பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் உட்பட 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தலவாக்களையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு பேருந்துகளும் பாரிய சத்தத்துடன் மோதுண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாவுலயில் இருந்து மாத்தளை வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் அதிகமாக பாடசாலை மாணவர்களே பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் 4 பேர் இருந்ததாகவும், அவர்கள் மாத்தளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்குள் பாடசாலை மாணவர்கள் 4 பேர் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

SHARE