AI தொழில்நுட்பம் மூலம் உருவான மாடல் ஐடானா.., மாதம் ரூ.9 லட்சம் வருமானம்

122

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஸ்பெயின் நாட்டில் உருவாக்கப்பட்ட மாடல் ஐடானா மாதத்திற்கு ரூ.9 லட்சம் வரை சம்பாதிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு
தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழில்நுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன.

முதலில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்திரவியல், சாப்ஃட்வேர் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

AI பெண் மாடல்
ஸ்பெயின் நாட்டின் தி கிளுலெஸ் என்ற நிறுவனத்தின் டிசைனரான ரூபன் க்ரூஸ் என்பவர் முதல் AI மாடலை வடிவமைத்துள்ளார். மாடலின் பெயர் ஐடானா. இந்த மாடல் உருவாக்கப்படுவதற்கு காரணம், மாடல்களுடன் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு என்று கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மாடல் ஐடானா குறைவான காலத்திலேயே 1,21,000 ஃபாலோவலர்களைப் பெற்றிருக்கிறது. முக்கியமாக, மாதத்திற்கு ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் திறன் கொண்டது.

இது குறித்து மாடலை வடிவமைத்த ரூபன் க்ரூஸ் கூறுகையில், “எங்களை மீறி ஒரு சில ப்ராஜெக்ட்கள் ரத்தாகின. மேலும், தாமதமாகி ஹோல்டில் வைக்கப்பட்டன. இது பற்றி நாங்கள் ஆய்வு செய்த போது எங்களுடைய டிசைனில் இருக்கும் பிரச்சனையால் ப்ராஜெக்ட்கள் ரத்தாகவில்லை. அது மாடலினால் மட்டுமே ரத்தாகியுள்ளன.

மேலும், ஒரே ஒரு போஸிற்கு அவ்வளவு பணம் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இல்லை. இதனால், பல மாதங்களாக யோசித்து வெவ்வேறு டிசைன் முயற்சி செய்து பார்த்து இந்த மாடல் ஐடானாவை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

மாடல் ஐடானா மாதத்திற்கு ரூ.9 லட்சம் வருமானம் ஈட்டுவது மட்டுமல்லாமல் ஸ்பானிஷ் போர்ட் சப்ளிமெண்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராகவும் மாறியுள்ளது.

SHARE