AK 61 படத்தில் புதிதாக இணைந்த இளம் நடிகர் ! யார் தெரியுமா?

176

 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான வலிமை திரைப்படம் நல்ல வசூலை குவித்தது, மேலும் தற்போது மீண்டும் இயக்குனர் எச்.வினோத்துடன் இணைந்து AK 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

ஹைதெராபாத்தில் நடந்து வரும் அப்படத்தின் ஷூட்டிங்கில் புதிதாக ஒரு நடிகர் இணைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ராஜதந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் வீரா AK 61 படத்தில் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

AK 61 திரைப்படம் ஏற்கனவே ஒரு வங்கி கொள்ளை குறித்த கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது. மேலும் சமீபத்தில் கூட இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

 

SHARE