சர்கார் டீசர் நேற்று வெளிவந்து இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது. வட இந்திய நடிகர்கள் எல்லாம் வாயடைத்து தான் போய் உள்ளனர்.
ஏனெனில் யு-டியுபே ஸ்தம்பிக்கும் அளவிற்கு இப்படத்தின் டீசருக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது.
தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி சர்கார் உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் 4வது இடத்தில் இருக்கும் Avengers: Infinity War படத்தின் டீசர் சாதனையை முறியடித்துள்ளதாம்.
ஆம், Avengers: Infinity War டீசர் 36 மணி நேரத்தில் தான் 1 மில்லியன் லைக்ஸுகளை பெற்றதாம்.
ஆனால், சர்கார் வெளிவந்த 5 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.