Ben’s luxury car, ஐம்பது இலட்சம் ரூபாய் பணம்! வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவுக்கு ஆளும் தரப்பு பேசிய பேரத்தொகை!

393

 

 

Ben’s luxury car, ஐம்பது இலட்சம் ரூபாய் பணம்! வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவுக்கு ஆளும் தரப்பு பேசிய பேரத்தொகை!
சிறீலங்காவின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் ஜனவரி எட்டு அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் சிறீலங்காவின் ஜனாதிபதியாகி விடவேண்டும் எனும் முனைப்பில் மகிந்த ராஜபக்ஸவும், அவரது தலைமையிலான ஆளும் தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
unnamed (15) unnamed (14) unnamed (13) unnamed (12)
இந்நிலையில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா அவர்களை அணுகியுள்ள மகிந்த ராஜபக்ஸ அரசு சார்பு முகவர்கள், தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு மக்களை வாக்களிக்குமாறு வலியுறுத்தி ஊடக அறிக்கை (Press Release Statement) விடுமாறு கோரியுள்ளனர்.
காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூறுதல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு இந்த மூன்று விவகாரங்களிலும் சம்பந்தப்பட்டுள்ள குடும்பங்களின் பொருளாதாரம், தொழில் வாய்ப்புகள், இழப்பீடு வழங்குதல் இவை தொடர்பில் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் பிரஜைகள் குழுக்களிடம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கை கொடுத்து அந்த ஊடக அறிக்கை வெளிவர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.
அவ்வாறு மக்களை அறிவுறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டால், முப்பது இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான Ben’s luxury car உம், ஐம்பது இலட்சம் ரூபாய் பணமும் தருவதாக குறித்த முகவர்களால் பேரம் பேசப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள விவகாரங்களிலும், பௌத்த மயமாக்கல், கனிய வளச்சுரண்டல்கள், சட்டவிரோத கைதுகள், தமிழ் இனவிகிதாசாரத்தை சிதறடிக்கும் குடியேற்றங்கள் இவை போன்ற பல்வேறுபட்ட சமுக அநீதிகளுக்கு எதிராக கரிசனையுடன் செயலாற்றிவரும் பிரஜைகள் குழுக்கள் தனிச்சிங்கள பௌத்த பேரினவாத அரசின் நிகழ்ச்சி வரைபுக்கு விலை போவார்களா? பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
SHARE