இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவருடைய ஆட்சிக்காலத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் அவை ஒன்றிலும் வருவாய் ஈட்டித்தரவில்லை..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவருடைய ஆட்சிக்காலத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் அவை ஒன்றிலும் வருவாய் ஈட்டித்தரவில்லை என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு...

பிள்ளையானின் விளக்கமறியல் எதிர்வரும் 24ஆம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜ சிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 04 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 24ஆம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான்...

பொலிஸ் – பொதுமக்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்! முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்உரை

வித்தியாவின் கற்பழிப்பு, கொலை ஆகியவற்றின் பின்னர் மாகாண, மாவட்ட, பிரதேச மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னரே நாங்கள் நடவடிக்கைகள் எடுத்திருந்தோம். எதிர்பாராத அல்லது...

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் கூற்று முற்றிலும் பொய்யானதாகும் – ஜனாதிபதி

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ எந்தவிதமான கலந்துரையாடலையும் நடாத்தவில்லை என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். அத்தகையதொரு தேசத்துரோகமான நடவடிக்கையை...

போர் விமானங்கள் கொள்வனவு அனுமதி அளித்தது அமைச்சரவை

விமானப்படைக்காக பல்நோக்கு போர் விமானங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்  அமைச்சரவை...

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றிய குற்றச்சாட்டு விசாரிக்க அரசு தயார்!

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடாத்த தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட  அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதாரத்துறை...

பசில் ராஜபக்ஸவின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது:

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்டுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூகொட மாவட்ட நீதவான் டி.ஏ.ருவான் பத்திரண இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார். மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை...

அரசியல்வாதிகளினால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி:

அரசியல்வாதிகளினால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளினால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். பொருளாதாரப்...

வடக்கு கிழக்கை இணைக்கும் விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு:

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் திட்டத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டியதில்லை என...

அமெரிக்காவுடனான இராணுவ தொடர்புகள் ஆபத்தானது – திஸ்ஸ விதாரண

அமெரிக்காவுடனான இராணுவ தொடர்புகள் ஆபத்தானது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் இலங்கை இராணுவ உறவுகளை வலுப்படுத்தி வருவது இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையையே உருவாக்கும் என அவர்...