இலங்கை செய்திகள்

தாய்லாந்தில் கைதான போதைப் பொருள் கடத்தல்காரர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் கடத்தல்காரான வசந்த மெண்டிஸ் என்பவர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபரை...

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான முற்கொடுப்பனவு முறை அறிமுகம்

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான முற்கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அதிவேக வீதி மேற்பார்வை மற்றும் முகாமைத்துவப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் வாகனங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக கருமபீடங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாதென...

கூட்டு எதிர்க்கட்சியினரின் முக்கியமான கூட்டம்

கூட்டு எதிர்க்கட்சியினரின் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று தலவத்துகொடை பிரதேசத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மே தினத்தை கொண்டாடும் விதமாக, மக்கள் போராட்டம் என்ற தமது பொதுக் கூட்டத்தின் இரண்டாவது கூட்டத்தை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு...

குழந்தைகள் வேறுபாடுகளுடன் பிறப்பதில்லை என்ற கருத்துகளை கேட்டு தமிழ் சமூகம் சலித்து போயுள்ளது – அநுரவுக்கு மனோ பதில்

அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலமே தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும் என கொழும்பு கம்பன் கழகத்தில் உரையாற்றிய என் இனிய நண்பர் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமையால் மகிழ்ச்சி அடைகின்றேன் என...

பிரேமதாஸ யுகத்தின் “கம் உதாவ” திட்டம் மீண்டும் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவினால் ஆரம்பிக்கப்பட்ட 'கம் உதாவ' (கிராமஎழுச்சி) நிகழ்ச்சித் திட்டத்தினை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் சில தேர்தல் தொகுதிகளில் கம் உதாவ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1980...

மின் நெருக்கடிக்கு துரிதமான யோசனை முன்வைக்குமாறு உத்தரவு

மின்சார துறையின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான யோசனை ஒன்றை துரிதமாக முன்வைக்குமாறு பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப் குழு) மின்சார சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடி சம்பந்தமாக...

புதிய வாகனங்கள் பதிவு எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் அண்மை காலமாக புதிய வாகனப் பதிவு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது. எனினும் ,இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில்...

அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க முடியாது. தகுதியானோருக்கு மட்டுமே வீட்டுத்திட்டம் – யாழ்.மாவட்ட அரச அதிபர்

வீட்டுத் திட்டங்கள் எந்த அரசியல்வாதியினதும் பரிந்துரையின் பேரிலன்றி, அமைச்சின் சட்டத்துக்கு உட்பட்ட தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறவுள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் குடாநாட்டின் அரசியல்வாதிகள் சிலர்,...

ஐக்கிய தேசிய கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்யும் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் மற்றும் ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கு பொருத்தமான வகையில் முழு சீர்திருத்தம் செய்வதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. இதற்கமைய கட்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்ட...

சமூகப் புறக்கணிப்பிலும் வறுமையிலும் உழலும் முன்னாள் பெண் போராளிகள்

பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் இன்னும் திருமணமாகாமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைத் திருமணம் செய்வதற்கு யாரும் முன்வருகிறார்கள் இல்லை. விடுதலைப் புலிகள் உயிர்ப்போடு...