இலங்கை செய்திகள்

நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது.

  நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஊடகங்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் பிரதமர் கருத்து வெளியிட்டு...

இலங்கை சமாதான முனைப்புக்கள் குறித்து மங்கள அமெரிக்காவிற்கு விளக்கம்

  இலங்கையின் சமாதான முனைப்புக்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவிற்கு விளக்கம் அளிக்க உள்ளார். நீடித்து நிலைக்கக் கூடிய சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முனைப்புக்கள் குறித்து...

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அரசியல் கைதிகளா?

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அல்.ஹசைன் வடமாகாணத்திற்கு விஜயம் செய்த போது கூறிய கூற்று ஒன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலி செயற்பாட்டாளர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில்...

யோசிதவிற்கு ஆதரவு தெரிவித்த நான்கு கடற்படை வீரர்கள் பணி இடைநிறுத்தம்

யோசித ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்த நான்கு கடற்படை வீரர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பணச் சலவை செய்த குற்றச்சாட்டின் பேரில் யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ரகர் போட்டியொன்று...

மஹிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் – எஸ்.பீ.திஸாநாயக்க

ஒரு கட்சியில் இருந்த வண்ணம் புதிய கட்சியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவரும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, கட்சியின் ஆலோசகராக செயற்பட்டு வரும் மஹிந்த...

சர்வதேச விசாரணைகள் இலங்கைக்குள் வர மகிந்தவே காரணம்: எஸ்.பி.திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஸவே சர்வதேச விசாரணை ஆணையாளர்களை இலங்கைக்குள் முதன் முதலாக அழைத்து வந்தார் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசதகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு...

அரசிலிருந்து சு.க. அமைச்சர்களை பிரித்தெடுக்க மஹிந்த அணி திட்டம்

தேசிய அரசில் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும், கைதுவேட்டைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது உட்பட ஐந்து தீர்மானங்களை அதிரடியாக நிறைவேற்றியுள்ளனர் மஹிந்தவுக்கு சார்பான உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள். ஸ்ரீலங்கா...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற ஐவர் நாடுகடத்தல்! குடியகல்வுப் பிரிவினர் விசாரணை

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா சென்ற ஐந்து இளைஞர்கள் மீண்டும் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர். குறித்த ஐந்து இளைஞர்களும் கடந்த ஜனவரி 08ம் திகதி பேருவளை பிரதேசத்தில் இருந்து படகொன்றின் மூலம்...

நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் பலி

ஆறு வயது சிறுவனொருவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். பதுரலிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் உறவினர்கள் சிலருடன் சுற்றுலாவிற்காக அப்பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், இதன்போது அங்குள்ள விடுமுறை விடுதியொன்றில்...

நட்பு ரீதியான கப்பலுக்கு அமோக வரவேற்பு

ஜப்பான் நட்பு ரீதியான கப்பல் நான்கு வருடங்களின் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 243 பேர் இந்த கப்பலில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல் 28ஆவது...