இலங்கை செய்திகள்

ஒழுக்க விதிகளை மீறுவோரை தண்டிக்கும் நோக்கில் மைத்திரி தலைமையில் விசேட கூட்டம்!

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்களை தண்டிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செற்குழு இன்று விசேட கூட்டமொன்றை நடாத்த உள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம்...

அனுமதியின்றி மஹிந்த கட்சிக் கூட்டங்களை நடாத்துகின்றார்! துமிந்த திஸாநாயக்க

அனுமதி எதுவுமின்றி குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கட்சிக் கூட்டங்களை நடாத்துவதாக ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்...

ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு 25ம் திகதி வரையில் விளக்கமறியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

நாட்டிற்குள் ஸிக்கா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் வந்தால் என்ன செய்வேண்டும்?

ஸிக்கா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார தரப்புகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் சுகாதார அமைச்சின் ஊடாக விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஸிக்கா வைரஸ்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும்: அரவிந்தகுமார் எம்.பி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற வகையிலான ஊதியம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு...

பிரகீத் எக்னெலிகொடையை கடத்திச்சென்றவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொழும்பில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட பின்னர் கிரித்தலே முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து கண்கள் கட்டப்பட்ட நிலையில் அக்கரைபற்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை ஹோமாகம...

எமது பிரச்சினைகளைத் தீர்ப்பது அரசின் கடமை – வடகிழக்கு மக்கள்

வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் மற்றும், மீனவர்களின் பிரச்சினைகளை முதன்மைபடுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணி உரிமை தொடர்பான...

வெலிக்கடைச் சிறையில் கோத்தபாயவுக்காக அறை தயார்

வெலிகடைச்  சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தடுத்து வைப்பதற்காக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல்...

தோஷம் கழிக்க கடலில் குளித்த மஹிந்த – ஆட்சி கிடைக்கும் என நம்பிக்கை

ஜோதிடத்தை நம்பி ஆட்சியை இழந்த மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவியேற பல்வேறு பகீரத பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என அடிக்கடி புகைப்பட ஆதாரங்களோடு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன் பொருட்டு இழந்து போன தனது அதிகாரத்தை...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அக்கறைகொள்ளாத சர்வதேசம்

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஹூசைன் அவர்கள் முன்வைத்த கருத்தானது தமிழினத்தின் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்னவெனில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இன்னும்...