இலங்கை செய்திகள்

தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களாக அதன் இணைத்தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராஜா

  தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களாக அதன் இணைத்தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராஜா மற்றும் அதன் அரசியல் உபகுழுவின் இணைப்பாளரான சட்டத்தரணி வி.புவிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனப் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.  

மகிந்தர் கண்ணீர் விட்டுஅழுதார் யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில்

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கடுவெல நீதிமன்றத்தினால் இன்று மாலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட...

யோஷித்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் கடற்படை

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் லெப்டினன்ட் யோஷித்த ராஜபக்ச மீது நடவடிக்கை எடுப்பதற்காக தாம் இன்னும் பாதுகாப்பு அமைச்சின் கட்டளையை எதிர்ப்பார்ப்பதாக கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது. கடற்படை பேச்சாளர் அக்ரம் அலவி கொழும்பின்...

ஜனாதிபதியின் செயலாளர் நிலைக்கு புதிய நியமனம்

  தற்போதைய ஜனாதிபதி செயலாளராக பதவி வகிக்கும் பி.பி.அயபகோன் ராஜதந்திர பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் அனுர திஸாநாயக்க, ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கும் முன்னர் அபயகோன்,...

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்குமா?

  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய சுதந்திர...

பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவினால் யோஷித்த ராஜபக்ச உட்பட 4 பேர் கைது.

பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படை...

முதல்வர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவை நிகழ்வில் பங்கேற்க கூடாது: ஆளும்கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வலியுறுத்தல்

  தமிழ் மக்கள் பேரவை தமது அரசியல் தீர்வு திட்ட முன்வரைபை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடவுள்ள நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொள்ள கூடாது என மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்கள் 20பேர் ஒப்பமிட்டு கடிதம்...

நல்லாட்சி பற்றி பேசியவர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்! கோத்தபாய

  நல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச...

விவசாயிகளின் பிரச்சினைக்காக வீதியில் உட்கார்ந்த அரசியல்வாதி! போராட்டம் வெற்றி

  மொனராகலை மாவட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில் விவசாய உரங்கள் பெற்றுக் கொள்ள முடியாததைக் கண்டித்து சமந்த வித்தியாரத்ன விவசாயிகளுடன் வீதியில் உட்கார்ந்து போராடியுள்ளார். மொனராகலை மாவட்டத்தின் ரிதீமாலியத்தவில் நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்குள்ள அரசாங்க...

யோஷித்தவிடம் நிதி மோசடி பிரிவினர் விசாரணை – இன்று கைது செய்ய பொலிஸார் தீவிரம்?

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை நடாத்தி வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். இந்த விசாரணைகள் கடற்படை...