இலங்கை செய்திகள்

எதிர்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய வேண்டும் – சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக தாம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை இன்னும் சில முடிவுகளை ஆராய்ந்து அறிவிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியது இதன் போதே அவர் இந்த அறிவிப்பை...

எதிர்கட்சித் தலைவர் விடயத்தில் குழப்பநிலை

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தனவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது. 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர். விமல் வீரவன்ச, வாசுதேவ...

பாகிஸ்தானில் உயர் மட்டங்களைச் சந்தித்த மைத்திரி – பல ஒப்பந்தங்கள் கைச்சாத்து

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும் பாகிஸ்தான் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிக்கு இடையில் இஸ்லாமாபாத்தில் சந்திப்பு...

யேமனில் நிர்க்கதியான 40 இலங்கையர்கள் ஜி பூட்டியில் தஞ்சம்

யேமனில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நிர்க்கதிக்குள்ளான நிலையில் மீட்கப்பட்ட 40 இலங்கையர்கள், ஜி பூட்டி இராஜியத்திற்கு அடைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. சீன கப்பலொன்றின் மூலம் ஜி பூட்டி இராஜியத்தை இலங்கைப்...

முறைப்படி அறிவிப்பு வந்தால் எமக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி என்கிறார் சம்பந்தன்

பாராளுமன்ற சம்பிரதாய பூர்வங்களுக்கு அமைவாக முறையாக அறிவிப்பு வெளியானால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே உரியது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதற்கான விடை இன்று...

கோயிலுக்குச் சென்ற அனந்தி சசிதரனுக்கு அனுமதி மறுப்பு

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனித் திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். நேற்றைய தினம் பங்குனித் திங்கள் நிகழ்வினை...

பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர்

இலங்கையில் படையினருக்கு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர். உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் அல்லது விடுமுறை எடுக்காமல் இராணுவ சேவையிலிருந்து வெளியேறியவர்கள், முறையாக இராணுவத்தை விட்டு விலகிக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கும்...

கருணாவை விசாரணை செய்யுமாறு உலமா கட்சி கோரிக்கை

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை விசாரணை செய்யுமாறு இலங்கை உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத், காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்னையில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும்...

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் கொடுப்பனவு தொகை இன்னமும் அதிகரிக்கப்படவில்லை – ஆசிரியர் சங்கம்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை இதுவரையில் அதிகரிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என இலங்கை...

சவூதியில் இலங்கை பணிப்பெண் கொலை! சடலத்தை கையளிக்குமாறு கணவன் கோரிக்கை

சவூதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே இவ்வாறு சவூதிக்கு...