இலங்கை செய்திகள்

சர்வதேச விசாரணைக்கு இலங்கை உண்மைத் தகவல்களை வழங்கவேண்டும்!

இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு உரிய தகவல்களை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்று ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ இந்த...

தமிழ் இயக்கங்களின் போராட்டம் தான் பிரதானமாக இலங்கையில் அதிகாரப்பகிர்விற்கானஅக்கறைகளை தோற்றுவித்தது.

    தமிழ் இயக்கங்களின் போராட்டம் தான் பிரதானமாக இலங்கையில் அதிகாரப்பகிர்விற்கானஅக்கறைகளை தோற்றுவித்தது. ஆனால் அது இலங்கையில் என்ன நிலையில் இருப்பினும் 13வது திருத்தத்தை உருவாக்குவதில் இந்த இயக்கங்களின் போராட்டமும் இந்தியாவின்அரசியல் அழுத்தமும் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் அதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பலர்இன்று மக்களின் பிரதிநிதிகளாகியுள்ளனர். இவர்கள் அதிகாரப் பகிர்விற்கான இயக்கத்தைஉணமையிலேயே முன்னெடுத்துச் செல்கிறார்களா. அதுதான் இல்லை. நாம் ஜெனிவாவில்பேசுகிறோம். அமெரிக்க ராஜாங்கச் செயலகத்துடன் பேசுகிறோம். தென்னாபிரிக்காவுடன்பேசுகிறோம் என்று புலுடாவிட்டுக் கொண்டு திரிகிறார்கள். உள்ளூரில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதை விட இருக்கும் அதிகாரப்பரவலாக்கல்கட்டமைப்பை யதார்த்தமாக்குவதை விட  உலகம் சுற்றுவது இவர்களுக்கு சௌகரியமாகஇருக்கிறது. பிரச்சனைகளுக்குத் தீர்வு என்று வந்துவிட்டால் தம்முடைய சௌகரியங்கள்கெட்டு விடும் என இவர்கள் அஞ்சுகிறார்கள். பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படுவதை விடஅதனை தக்கவைப்பதையே இவர்கள் உளமார விரும்புகிறார்கள். மக்களின் அன்றாடபிரச்சனைகள் என்று அளவு கணக்கற்று இருக்கின்றன. வறுமை, பாதுகாப்பின்மை, அனாதரவுநிலை, நிலம், வீடு, சுகாதாரம், பாதை,போக்குவரத்து, கல்வி, சமூகப்பிரச்சனைகள் எனஏராளம். தமக்குள் எந்த புரிதலும் இல்லாமல் தமது தனிப்பட்ட நலன்கள் சார்ந்து இங்கும்இவர்கள் தேர்தல் சமயங்களில் தனிநாடு, சுயநிர்ணயம், இனமானம் பற்றி பேசுவார்கள்.இவர்களது இந்த அரசியல் உள்ளூரில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய ஜீவாதார நலன்களைப்பாழடித்து விடுகிறது.   எமது  மக்களுக்குத் தேவை சாமானிய மக்கள் தலைவர்களே. வடஅமெரிக்க மேற்கத்தையமற்றும் புலம்பெயர் அதிகாரசக்திகளின் கடாட்சத்துடன் தமது  சொந்த அலுவல்களைப்பார்ப்பதற்கான நடைமுறைகளே பெருமளவில் காணப்படுகின்றன. ஒரு சிலருக்கு சமூகஅக்கறை இல்லை என்றில்லை. எனினும் அது ஆக்கபூர்வமாக, கனதியாக சமூகத்தைஎட்டவில்லை. பேரழிவைச் சந்தித்த சமூகத்தை மீண்டெழச்செய்வதற்கு பதிலாகவிபரீதங்களுக்குள் சிக்கவைக்கும் போக்கே அதிகமாக காணப்படுகிறது. வன்முறையற்ற,ஜனநாயக பூர்வமான சுதந்திரத்திற்கான இடைவெளிகளை உருவாக்குவதற்கான விருப்பங்கள்காணப்படவில்லை. தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் சரி, மாகாண சபை, உள்ளூராட்சி பிரதிநிதித்துவமும்சரி வெறும் அதிகாரங்கள் பதவிகள் என்பவற்றுக்கப்பால் மக்களுக்கு எத்தகையபலாபலன்களை ஏற்படுத்தியுள்ளன? 30 ஆண்டுகால இழப்புக்களுக்கு வரவில்லை. அதுபற்றிய கரிசனைகளும் இல்லை. தமது பதவிகள் இது தான் தமிழ்  தேசிய கூட்டமைப்பின்முக்கிய பிரச்சனை. பதவிகள், அதிகாரங்கள் மக்களுக்கானவை அல்ல. தமது சொந்ததனிப்பட்ட நலன்களை முதன்மைப்படுத்தியவை. ஜனநாயக உணர்வு கொண்ட இயக்கங்களில் இருந்தவர்களுக்கு தவறுகள்விதிவிலக்குக்களுக்கு அப்பால் சமூக நலன்களே முதன்மையானவையாக இருந்தன. சமூகவிடுதலை தியாகம் என்பனவெல்லாம் இன்று கேள்விக்குரியனவாக ம hறிவிட்டன. இன்றுஎல்லாமே அர்த்தம் இழந்து போய்விட்டன. சமூக விடுதலை, தியாகம் என்பனவெல்லாம்இன்று கேள்விக்குரியனவாக மாறிவிட்டன. சுய நலமும் பதவி வெறியும் கொண்டவர்களுக்கேஇன்று சமூக மரியாதையும் இருக்கிறது. போராடியவர்கள் இன்று தீண்டத்தகாதவர்களாகப்போய்விட்டார்கள். எமது சமூகத்தின் ஆதிக்க மனோநிலை அப்படித்தான் இருந்தது.இருக்கிறது. இன்று தமிழ் அரசியல் பெருமளவிற்கு அயோக்கியர்களின் கூடாரம் என்று கூறுவதில் எனக்குஎந்த கூச்ச நாச்சமும் இல்லை. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பார்கள். 30வருடம் யுத்தத்தையும் அழிவையும் சந்தித்த ஒரு மக்கள் சமூகத்தின்  மத்தியில் வேலைசெய்பவர்கள் குரோதங்கள், விரோதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு குறைந்த பட்சஇணக்கப்பாட்டுடன் வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் உள்ளூரிலும்புலம்பெயர் தளத்திலும் அதனை மருந்துக்கும் காணமுடியாது. கடந்த 30 வருடங்களுக்குமேலாக சொந்த நிலத்தை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சமூகம் தொடர்பாக இவர்களுக்குஎந்த பொறுப்புணர்ச்சியும் கிடையாது. அது ஓடித்தீரும் வரை அரசியலை நடத்துவோம்என்றவாறே இவர்களது செயற்பாடுகள் அமைகின்றன. உள்ளூரில் ஒரு கண்ணியமான வாழ்வுஎன்பது இவர்களது மனங்களில் இல்லை. அவலம் இவர்களின் பிழைப்பாகிறது. இலங்கைத் தமிழர்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் சிறப்பான வாழ்வொன்றைகட்டியெழுப்ப இவர்கள் பங்களிக்க முடியும். ஆனால் இவர்கள் அதனை விரும்பவில்லை.இலங்கையின் ஆட்சியாளர்களும் இலங்கை பல்லினங்களின் தேசமாக மிளிர்வதைவிரும்பிவல்லை. வெ'வ்வேறு சமூக கலாச்சார தேசிய அடையாளங்கள் அவற்றின் முக்கியத்துவம் இன்றையஉலகியல் யதார்த்தம் அவர்களுக்குத் தெரியாதென்றில்லை. அவர்கள் தமது சொந்தஅதிகாரத்திற்காக 'ஒரேநாடு ஒரே மக்கள்' என்கிறார்கள். அவ்வாறு அச்சில் வார்த்தது போல்மனிதர்கள் இருப்பதில்லை.  பேரினவாதத்திற்கு சிறுபான்மை இன சமூகங்கள்கீழப்படியவேண்டும் என்று வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. இங்கு அதிகாரத்திற்குபேரினவாதம் தேவைப்படுகிறது. படைபலம் தேவைப்படுகிறது. இன்றைய அதிகாரஅகங்காரத்தின்  உலகப் பொதுவான போக்கு இத்தகையதுதான். ஆனால் பெருவாரியான மக்களின் சுதந்திரம் ஜனநாயகம் பற்றியே இப்போது பேசவேண்டியிருக்கிறது. இன சமூகங்களின் சுதந்திரமான ஐக்கியமே பாதுகாப்பான வாழ்வையும்பொருளாதார சமூக முன்னேற்றத்ததையும் ஏற்படுத்தக் கூடியது. செயற்கையாகஉருவாக்கப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் ஒரு நாடு முன்னேற முடியாது. 1970 களின் பிற்பகுதியலும் முற்பகுதியிலும் தோற்றுவிக்கப்பட்ட சூழ்நிலைகள் எத்தகையவிபரீதங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது வரலாறு. ஆனால் அதிகாரப் பேராசை இந்தவிபரீதங்களை நோக்கியே அழைத்துச் செல்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில்தலையெடுத்த இந்த போக்கு ஒரு விசச் சுழல் போல் திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்கிறது.எமது சமூக வாழ்வை அரித்தழித்து வருகிறது. இலங்கையின் அனைத்து இன சமூகங்களும்எட்டியிருக்க கூடிய அரிய சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருக்கின்றன. கடந்து வந்த 30 வருடங்களில் இழக்கப்பட்ட மனித உயிர்களின் இன்றைய பெறுமதிஎன்னவென்றால் பெருவெப்பம் நிறைந்த பாலைநிலம் ஒன்று மனங்களில் விரிகிறது. 'இதுவரை கால வரலாறுகள் யாவும் வர்க்க போராட்டத்தின் வரலாறே' என்று கம்யூனிஸ்கட்சிஅறிக்கையின் முதல் வரியாக மார்க்ஸ் ஏங்கல்ஸ் பிரகடனம். ஆனால் இலங்கையின் இனசமூக ஜனநாயக உரிமை களுக்காகப் போராடியவர்களுக்கு இன்று என்ன சமூகப் பெறுமானம்இருக்கிறது என்பது முக்கியமான கேளிவியாகும். அனேகமான அறம் சார் போராட்டங்களின் பின்னரும் அதற்கு சம்பந்த மில்லாத கூட்டமொன்று அதிகாரத்திற்கு வருகிறது. விதி விலக்காகவே  போராட்டத்திற்கும்  புதியஅதிகாரத்திற்கும் தொப்புள் கொடி உறவு காணப்படுகிறது. அதற்கு இலங்கையின் சுதந்திரஇயக்கமும் அதற்கு பின் வந்த அதிகாரமும் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டமும் உருவாகிய அதிகாரங்களும் விதிவிலக்கில்லை. சுதந்திரம் ,விடுதலையென எழுச்சிகொள்பவர்கள் எழிலார்ந்த கனவுகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் நம் கண்முன்னேயேகனவுகள் சிதைவையும் கண்டோம். எனவே சுதந்திர இயக்கத்தின் செல்நெறி என்ன என்பதுபற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். இப்போதைய சமூக அக்கறையற்ற களவாணி  அரசியலுக்கு மாற்றான ஒரு பாதையைநாடளாவிய அளவில் உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றி சிந்தித்தாகவேண்டும்.எத்தகையபெரிய வரலாற்று துன்பியல் நிகழ்ந்திருக்கிறது என்ற பிரக்ஞை இல்லாமலே வாழ்கிறோம்.சமூகப் பிரக்ஞையுடன் போராடியவர்கள் மடிந்த பூமியில்  பரவலாக வெட்க கரமானஆசாடபூதிகளும், சுயநலமிகளும் மக்களின் சார்பாக அதிகாரம் பெற்றுள்ளார்கள். இது முன்னைய  நிலையை விட மோசமானதையே ஸ்தாபிக்கும் . கபடதாரிகளும்-களவாணிகளும் மக்களின் சார்பாக அதிகார சக்திகள் ஆகும் போது சமூக பண்பாட்டுமறுமலர்ச்சியோ பொருளாதார அபிவிருத்தியோ ஏற்பட சாத்தியமில்லை.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சேனா­தி­ரா­சாவே தமி­ழ­ரசுக் கட்சியின் தலைமைப் பத­விக்குப் பொருத்­த­மா­னவர்- சீ.வி.விக்­கி­னேஸ்­வரன்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சேனா­தி­ரா­சாவே தமி­ழ­ரசுக் கட்சியின் தலைமைப் பத­விக்குப் பொருத்­த­மா­னவர். தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு அடுத்­த­ப­டி­யாக அவரே தமி­ழ­ரசுக் கட்­சியை நீண்­ட­கா­ல­மாக கட்­டி­வ­ளர்த்த பெரு­மைக்­கு­ரி­யவர் என வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைப் பத­விக்கு...

காணி உரிமையாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்:

யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு காணி உரிமையாளர்களுடன் இணைந்து நாம் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என கூறப்படும் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என...

தமிழ்ச் சினிமாப் படப் பாணியில் நடந்திருக்கக்கூடிய இச்சம்பவம் இலங்கையில் தமிழ் ஊடகத்துறையினருக்கு எவ்வாறான அச்சுறுத்தல் நிலவுகின்றது என்பதை மீண்டும்...

தமது உயிரையும் துச்சமாக மதித்து ஊடகப்பணியில் ஈடுபட்டுவரும் ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்துவரும் அரசாங்கம் இதற்கான விளைவுகளை மிகவிரைவிலேயே அனுபவிக்கும் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்...

தமிழீழத்துக்கான நட்பு நாடுகளை உருவாக்கும் பணியில் அனைத்துலக மக்கள் அவை- முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து 5 ஆண்டுகள்...

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்படும் இன அழிப்பின் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு ஒரு அரசு இல்லையேல், தமிழனுக்கு எதும் இல்லை என்ற நிலை இலங்கைத் தீவில் உருவாகிவிட்டது. ஈழத்தமிழர்கள் பிரச்சினையை தனி மனித...

இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் முன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார். ஐ.நா விசாரணைக்குழு நியூயோர்க்,...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமுடி ஒன்றுக்குக் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெறுமானமற்றவர்...

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென அவரது கட்சியின் முன்னாள் உபதலைவரான கலாநிதி மகேஷ் அத்தபத்து வேண்டுகோள் விடுத்துள்ளாளர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்...

நேரடியாக வாகனங்கள் மோதும் காட்ச்சி என்ன நடக்குது என்று மட்டும் பாருங்கள்

  நேரடியாக வாகனங்கள் மோதும் காட்ச்சி என்ன நடக்குது என்று மட்டும் பாருங்கள்

வடக்கு, கிழக்கில் வாழும் பெண்­களின் பாது­காப்பு இன்று கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது- இரா. சம்­பந்தன்

  காரை­ந­கரில் இரண்டு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­பட்ட சம்­பவம் தொடர்பில் இடம்­பெற்ற அடை­யாள அணி­வ­குப்பில் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் நிறுத்­தப்­ப­டாது வேறு நபர்­களே நிறுத்­தப்­பட்­டுள்­ளனர் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா....