இலங்கை செய்திகள்

விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவு- ஜனாதிபதி

    விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொது முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விருப்பம் இல்லாமல் எவரும்...

மலேசியாவில் கைதான விடுதலைப்புலி சந்தேகநபர்கள் மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!-

மலேசியாவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரும் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இலங்கையின் ஊடகங்களுக்கு...

சிவில் பாதுகாப்பு படையணி மத்திய நிலையம் கோத்தபாயவினால் திறந்து வைப்பு!-மணலாறு

மணலாறு  பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படையணியின் மத்திய நிலையத்தை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். யுத்த காலத்தில் மிகவும் மோசமாகப்...

நிபுணர் ஜகாங்கரின் கருத்துகள் வருத்தமளிக்கிறது ஐ.நாவின் இரகசிய விசாரணையை ஏற்க முடியாது! -இலங்கை அரசு

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கீர் வெளியிட்டு வரும்...

யாழில் வல்லுறவுக்கு உள்ளான சிறுமிகளின் பெற்றோர்களை கூட்டமைப்பினர் சந்திப்பு! ஈபிடிபியினரும் அச்சுறுத்துவதாக முறைப்பாடு

யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் பெற்றோர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் உயர்மட்ட நடவடிக்கை எடுக்கப்படும், படையினர் மக்களுடைய...

காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தாருங்கள் எந்த ஆர்பாட்டங்களிலும் பிரியோசனம் கிடையாது மாற்று வழி தான் நாடவேன்டும்...

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் போயுள்ளவர்களை மீட்டுத்தரும்படியும் வேண்டியும், வவுனியா காளிகோவிலில் தேங்காய் உடைத்து நடத்தப்பட்ட பிரார்த்தனையின்போது உறவினர்கள் பலரும் கண்ணீர் விட்டு, கதறி அழுது...

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு ஆலொசனை வழங்க மூன்று வெளிநாட்டு நிபுணர்களை ஜனாதிபதி...

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு ஆலொசனை வழங்க மூன்று வெளிநாட்டு நிபுணர்களை ஜனாதிபதி மஹிந்த...

இராணுவத்தரப்பால் திட்டமிட்டு ஒட்டப்பட்ட சுவர் ஒட்டிகள்- மக்களுக்கு தெரியும் உண்மை எதுவென

யாழ். நகரப் பகுதியில் கூட்டமைப்புக்கு எதிராக அநாமதேய சுவரொட்டிகள்! யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன அவற்றல் தமிழ்...

அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்க தான் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்க தான் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் காரணங்களுக்காக நாட்டின் அபிவிருத்தியில் மாற்றங்களை செய்ய இடமளிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னிச்சையாக வேலை செய்யாது,...

அரசாங்கத்தினால் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது- பிரான்ஸ்

இலங்கையில் நல்லிணக்கத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முதன்மையானது என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜென் போல் மொன்சுவா (துநயn-Pயரட ஆழnஉhயர)...