பிராந்திய செய்திகள்

வவுனியா பொது வைத்தியசாலையின் அவலநிலை

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் நோயாளர்களை தரையில் படுக்க வைத்து பராமரித்து வருவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் போதிய அளவு கட்டில் வசதியின்மையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக...

மானிப்பாய் வாள்வெட்டு வழக்கு! நீதிமன்றத் தீர்ப்பு சரியானதே! இளஞ்செழியன் அதிரடி

மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டதீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடிசெய்துள்ளார். வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி,...

கொழுந்து பறித்த பெண்ணை தாக்கிய மான்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோவர் கிரன்லி தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த பெண் தொழிலாளர் இன்று (13) ஒருவரை அப்பகுதியில் மேய்ந்து கொண்டியிருந்த மான் தாக்கியதால் குறித்த பெண் பலத்த காயங்கள்...

வவுனியாவில் விபத்துக்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!(photos)

விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நேற்று 13-10-2016 வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில் பாடசாலை மாணவர்களுக்கான விபத்தை தவிர்ப்பது சம்பந்தமான...

கிழக்கில் வறட்சியின் அவலம்! 16 பாடசாலைகளுக்கு அவசர வேண்டுகோள்?

தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியை அண்டியுள்ள 16 பாடசாலைகளை ஒரு மணிநேரம் தாமதமாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று பேரணி ஒன்று இடம்பெறுகின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பழைய மாவட்ட...

வவுனியாவில் வறட்சி காரணமாக 938 குடும்பங்களைச் சேர்ந்த 3,111 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து நூற்று 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட வறட்சி நிலை...

யாழ்ப்பாணம் வரணி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று மதியம் கிளிநொச்சியில் மாயம்!

யாழ்ப்பாணம் வரணி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று மதியம் கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த வர்த்தகர் கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகம் ஒன்றிக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே...

கன்னியா பறிபோய் விட்டது! காரணம் என்ன?

கன்னியா பறிபோய்விட்டது என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வெளிவந்த போது இலங்கையில் உள்ள அனைத்து சைவத் தமிழ் மக்களது மனங்களிலும் வேதனைகள் வெளிப்பட்டதை உணர முடிந்தது. இதற்குரிய காரணமாக முன்வைக்கப்பட்ட பதில்களை சுருக்கமாக கூறுவதானால்...