பிராந்திய செய்திகள்

கிராமசேவையாளருக்கான பிரியாவிடை நிகழ்வு

வவுனியா மூன்றுமுறிப்பு கிராமசேவையாளர் பிரிவில் கடையாற்றி ஒய்வுபெறும் கிராமசேவையாளர் திரு.ச.வேலுப்பிள்ளை அவர்களுக்கான பிரியாவிடையும், புதிதாக கடமைக்கு வருகைதந்திருக்கும் கிராமசேவையாளரான திரு.ஆதவன் அவர்களை வரவேற்கும் நிகழ்வானது 07.08.2016 அன்று மூன்றுமுறிப்பில் நடைபெற்றது. இவ் பிரிவுபசார...

இரண்டு மாடுகளை இணைத்து கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்று மாலையில் கைதுசெய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி இரண்டு மாடுகளை இணைத்து கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(7) மாலையில் கைதுசெய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில்….

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது செயற்பாடுகளில் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தலையிடுவதாக கோரியும் தமக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரை மாற்றக்கோரியும் இந்த போராட்டத்தில்...

குளக்கட்டுப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம்விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் குளக்கட்டுப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம்விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 33 வயதான ச.உமாகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துணுக்காய்...

கிளிநொச்சி, மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை பூட்டப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் அவதி…..

கிளிநொச்சி, மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை பூட்டப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பாரிய அசொளரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில், பெருமளவான நோயாளர்கள், நோயாளர் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை இன்று காலை...

அரசாங்கம் விதித்துள்ள வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் கடைகளை மூடி போராட்டம்

அரசாங்கம் விதித்துள்ள வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நாளை நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். இதன்படி, நாளை முதல் கடைகளை மூடி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...

நண்பர் ஒருவருக்கு தமது மனைவியை 2000 ரூபாவிற்கு விற்பனை செய்த கணவர்!

குருணாகல் மாவட்டம் பொல்பித்திகமவில் இரண்டாயிரம் ரூபாவிற்கு மனைவியை வேறு ஓர் நபருக்கு கணவர் விற்பனை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மொரகொல்லாகம என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணின் முதல் திருமண வாழ்க்கை தோல்வியில்...

அனைத்து ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர்களின் கவனத்துக்கு…

பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையானது கடந்த 75 வருடங்களுக்கு மேலாக அதற்குரிய சுயாதீன யாப்புடன்  கிட்டத்தட்ட 750 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது.ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர்கள் கடின உழைப்பினால் பல துறைகளிலும் உயர்ந்த நிலையை அடைந்து...

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தை தெரிவு செய்ய முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களினுடைய இனப் பிரச்சினைக்கு...

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தை தெரிவு செய்ய முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களினுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் எஸ். சிவகரன்...

இலங்கை அரசியல் யாப்பு என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது.

  இலங்கை அரசியல் யாப்பு என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை விரிவுரையாளரும், சுயாதீன ஆராட்ச்சியாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய 'இலங்கை அரசியல் யாப்பு என்ற நூல் இன்று 06-08-2016 தமிழருவி த.சிவகுமாரன்...