பிராந்திய செய்திகள்

அடை மழை காரணமாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 106 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

ஒட்டுசுட்டான் பண்டார வன்னியன் கிராமத்தில் வெள்ளப்பெருக்கினால் 38 குடும்பங்கள்இடம் பெயர்ந்த நிலையிலும் 68 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் பொது இடங்களில் தங்கவிடப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...

இலவச கல்வியை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவபீட மாணவர்களே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடாத்தியுள்ளனர். மாலெபயில் உள்ள தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தினை...

புகையிரதத்தில் மோதி வீதி பாதுகாப்புக்கடவை காவலாளி பலி

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று  இரவு பயணித்த புகையிரதத்தில் மோதி புகையிரத வீதி பாதுகாப்பு கடவையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புதுக்கமம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி மதுரங்குளம்...

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் அடை மழை

  மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் அடை மழைபெய்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதானிப்பு நிலைய வானிலை அதிகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார். இன்றைய தினமும் காலை எட்டு மணிமுதல் முற்பகல்...

வட்டவளை வேன் விபத்தில் – 5 பேர் காயம்

  வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் வெளிஓயா பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5...

வாழ்வின் எழுச்சி பயனாளிகளுக்கான உதவி வழங்கல்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு முன்னெடுப்பொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முப்பது பயனாளிகளுக்கும் நீர் அழுத்த விசைப்பொறிகள் (நீர் இறைக்கும் இயந்திரம்)...

நாடு திரும்பிய பெண் வீடு திரும்பவில்லை – மாமனார் புகார்

அட்டன் டிக்கோயா தோட்டத்திலிருந்து சவூதி நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்று நாடு திரும்பிய பெண் இதுவரை தனது வீட்டிற்கு வரவில்லை என பெண்ணின் மாமனாரான ஆறுமுகம் பச்சைமுத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை...

தன்துணையை காப்பாற்ற மனித உதவியை நாடியுள்ள யானை

காயப்பட்ட பெண் யானையை ஆண் யானை காப்பாற்ற முயற்சி எடுத்த சம்பவம் ஒன்று வாழைச்சேனை வாகனேரி குளத்துமடு கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. வாகனேரி காட்டு பகுதியில் பெண் யானை ஒன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்ட நிலையில்...

கிழக்கு மாகாணத்தில் கனத்தமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30...

பாகிஸ்தான் பிரதமர் தலதா மாளிகைக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்துள்ளார். கண்டி சென்ற பாகிஸ்தான் பிரதமர் வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகைக்கும் சென்றார். இதனையடுத்து மீரா...