செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடையும் எச்சரிக்கின்றார் மஹிந்த ராஜபக்ஸ:-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதியும் கட்சியன் முன்னாள் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். அம்பலந்தொட்டை ரீதிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்...

150 மில்லியன் ரூபாய் பெறுமதியான கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் எஸ்.பிக்கு தொடர்பா?

கொழும்பு 7 இல் உள்ள வீடொன்றிலிருந்து 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் முன்னாள் உயர்கல்வியமைச்சர் சந்தேகநபரா என்பதை  ஆராயுமாறு கொழும்பு பிரதான நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்,18 ம்...

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய ஆயுதங்களை கடலில் கொட்டப்பட்டன:-

ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, ஒரு தொகுதி ஆயுதங்கள், நேற்று புதன்கிழமை அழிக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் சான்றாதாரங்கள் என்பதுடன் நிறைவடைந்த வழக்குகளுக்குரிய...

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட வேண்டும்

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல் சம்வத்தை அரசாங்கம் மெய்யாகவே கண்டித்தால், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு...

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை அவுஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்து:

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சட்;டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் எவரும் நாட்டில் குடியேற்றப்பட மாட்டார்கள் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு...

வாழைச்சேனையில் விளை நிலங்கள் பாதிப்பு

மடக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் வாழைச்சேனை விவசாய திணைக்களத்திற்கு உட்பட்ட விவசாய பிரதேசத்தில் பல வாய்க்கால்கள் உடைப்பெடுத்தமையால் பெருமளவிலான வயல் நிலங்கள்...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகள் தனித்து போட்டியிடத் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகள் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து அரசியல் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக...

இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரிய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு ஹிக்கடுவை - ஆராச்சிகந்த பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம்...

வெடிகுண்டுடன் புத்தளத்தில் நபர் ஒருவர் கைது

புத்தளம் , தில்ஹடிய பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரின் வீட்டில் இருந்து நேற்றைய தினம் இந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்...

பிள்ளையான் மீதான விசாரணைகள் புலனாய்வு பிரிவினரால் திசை திருப்பப்படுகிறதா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜோசப் பரராஜசிங்கம்...