பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயக கதிர் வேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம்
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை நகரில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயக கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற தீர்த்தோற்சவத்தில் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலயத்தின் வருடாந்த அலங்கார...
வவுனியா இ.போ.ச.சாரதி மீது மதுபோதையில் வந்து தாக்குதல்.
வவுனியா இ.போ.ச.சாரதி மீது மதுபோதையில் வந்து தாக்குதல். வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இ.போ. ச. சாரதி மீது வீரபுரம் பகுதியில் வைத்து மதுபோதையில் வந்த வவுனியா பொது மருத்துவமனையில்...
சர்வதேச புகழ் பெற்ற தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளாரின் சிரார்த்த தினம் நேற்று
சர்வதேச புகழ் பெற்ற தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளாரின் சிரார்த்த தினம் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் வவுனியா நகர மத்தியில் உள்ள அன்னாரின் சிலைக்கருகில் இடம்பெற்ற இந்த...
அன்புடன் செல்வம் அவர்களுக்கு… நடராஜா குருபரன் எழுதுவது..
நடராஜா குருபரன்.. எழுதுவது..
இன்று பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராகவும்தேர்வாகி இருக்கிறீர்கள்... முதலில் வாழ்த்துக்கள்...
1990களில் வவுனியா முழு இராணுவக் கட்டுப்பாட்டுள் இருந்தகாலத்தில் வவுனியா நகர பகுதியில் முதலில் உங்களைச்சந்தித்திருந்தேன். பின்னர் குகன் வவுனியாவில் பொறுப்பாகஇருந்த காலத்திலும் உங்களுடன் தொடர்பில் இருந்தேன். பின்கொழும்பில் உங்களை நேரடியாகவும் சந்தித்திருந்தேன்.பிற்பாடு எங்கள் தொடர்பு தொலைபேசியில் பேசுவதாகத்தொடர்ந்தது. அண்மைக் காலமாக தொலைபேசியில்தொடர்புக்கு வருவதில்லை. அதனால் நானும் அழைக்காமல்விட்டுவிட்டேன். ஆனாலும் வாழ்த்துகளை மட்டுமல்லபரிந்த்துரைகளையும் சொல்லவேண்டியது ஒருபத்திரிகையாளனின் கடமை என்று மனம் சொல்லியதுஅதனால்தான் இக்கடிதம்.
இலங்கைப் பாராளுமன்றில் பிரதமரை தவிர்த்து 3 ஆவதுபெரும் பதவி இன்று உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது...
உங்களுக்குக் கிடைத்த அந்தப் பதவியும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 16 பேருக்கான நாடாளுமன்ற பதவிகளும்இவற்றின் கூடவே வரும் வரப்பிரசாதங்களும் தமிழ் மக்களின்வாக்குகளினால் கிடைக்கப்பெற்றவை. ரத்தமும் சதையுமாக,குற்றுயிராய் கொலைக்களத்தில் கிடந்த லட்சக்கணக்கானமக்களின் தியாகத்திற்கு பரிசாகாக்கிடைத்திருக்க வேண்டியசுதந்திரமும் விடுதலையும் இன்னும்கிடைக்கவில்லை.ஆனாலும் உலக ஒழுங்கின் அழுத்தத்தினால் இலங்கைநாடாளுமன்றத்துள் நுழையவேண்டிய சூழ் நிலைக்காட்பட்டநிலையில் கிடைப்பவை மக்களுக்கே சொந்தமானவை என்பதைநினைவூட்டவேண்டிய பொறுப்பையும் கடமையையும் நினைவுகூர்ந்து உங்களுடன் கடிதமூலம் பேச நினைக்கிறேன்.…
இத்திறந்த கடிதம் உங்களுக்குச் சிலவேளை எரிச்சலைக்கூடத்தரலாம். இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களில் குளோபலின் பங்கும் நிச்சமாக இருக்கிறதுஎன்ற தன்னம்பிக்கையில் உங்களுடனும் உங்களை போன்றசகல அரசியல்வாதிகளுடனும் உரையாடவேண்டிய தேவைஎனக்கு இருக்கிறது. உங்களை அவதானிக்க வேண்டியபொறுப்பும் இருக்கிறது.
அண்மைக் காலத்தில் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின்தலைவர் என்ற பதவி கிடைக்கும் 3ஆவது தமிழர் நீங்கள் என நினைக்கிறுன். முதலில் ஜே.வீ.பியின் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இந்தப் பொறுப்பில்இருந்தார்...
ஜே.வி.பியின் கட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில்அவருக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள அனைத்தையும் தான்அங்கம் வகித்த கட்சிக்கே கையளித்திருந்தார். அவற்றை அவர்தனிப்பட அனுபவிக்கவோ, கையாளவோ இல்லை..
அடுத்து பதவி வகித்தவர் ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் முருகேசு சந்திரகுமார். தனக்குரியவரப்பிரசாதங்களை அவர் எப்படி பயன்படுத்தினார் எனஉண்மையில் எனக்கு தெரியாது. அவர் அதனைத் தமிழ்மக்களுக்காகப்பயன்படுத்தியிருந்தால் யாராவது முன்வந்துசொல்லுங்கள்.
ஆனால் உங்களுக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புதியபதவியின் ஊடாக கிடைக்கப் பெறும் வரப்பிரசாதங்களை நீங்கள்எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதில் முழுமையானவெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என நான் கருதுவதில்எந்தத் தவறுகளும் இல்லை என நீங்கள் கூறுவீர்களோதெரியவில்லை.
இப்பொழுது சந்திரகுமாரைக் கேட்டால் அவர் கட்டாயம்வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றுகூறுவார்.
ஆயிரக்கணக்கான போராளிகளினதும் லட்சக்கணக்கானமக்களினதும் தியாக வேள்வியில் செய்யப்பட்ட மிக அற்பமானஅறுவடைதான் உங்களுக்கு கிடைத்த பதவி. ஆனால் தனிப்பட்டஉங்களுக்கு இது பெரிய அறுவடை. ஆனால்பொதுக்காணிகளில் செய்யும் அறுவடைகள் குறித்து மக்கள்கண்காணிப்பார்கள்.
ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச் செல்வன் தனது முகநூல்பதிவில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவிக்குஉரிய வரப்பிரசாதங்கள் எவை என விபரமாகக்குறிப்பிட்டிருக்கிறார்.
ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச் செல்வனின் பதிவைஇங்கு தருகிறேன்:
"இப்பதவிக்குரியவருக்கு வழங்கப்படுகின்ற வரப்பிரசாதங்களைவிட பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டஏனையவர்களுடன் ஏற்படுகின்ற அறிமுகம் மற்றும்தொடர்பாடல் என்பதே மிக முக்கியமானது.
இதனைக் கொண்டு தங்கள் பிரதேசங்களில் மக்களின்அடிப்படைப் பிரச்சினைகள் முதல் வேலைவாய்ப்பு உள்ளிட்டபல வற்றை செய்ய முடியும்.
முன்னாள் பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தவிசாளா்சந்திரகுமார் அவர்கள் இதனை வைத்தேஆயிரக்கணக்கனவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பலவிடயங்களை மேற்கொண்டார்.
பாராளுமன்றத்தில் உள்ள அனைவருடனும் நட்பு ஏற்படும் அந்தநட்பை கொண்டு காரியங்களை சாத்தித்துகொள்ள முடியும்.
இது ஒரு புறமிருக்க இந்த பதவிக்குரிய வரப்பிரசாதங்களைபாருங்கோ
22 பணியாளர்கள், அதி சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட07வாகனங்கள் அதில் நான்கு வாகனத்திற்கு வரையறையற்றஎரிபொருள் எவ்வளவு வேண்டுமென்றாலும்நிரப்பிக்கொள்ளலாம். 22 பணியாளர்களில் 03 பேருக்கு 70ஆயிரத்திற்குமேல் இதர படிகள் உள்ளிட்ட சம்பளம்,ஏனையவர்களுக்கு 40 ஆயிரத்திற்கு மேல்( உண்மையாகபணியாளர்களை நியமிக்கலாம் அல்லது மனைவி மச்சான்மாமன் என்று நியமித்து கொடுப்பனவை பெற்றுக்கொள்ளமுடியும்)
இதனை தவிர நான்கு ஜந்து தொலைபேசி இணைப்புகள்போட்டோ கொப்பி மெசின், பக்ஸ் மெசின், அதற்குரியகொடுப்பனவுகள் என கூறிக்கொண்டே போகலாம்"
இவ்வளவு வரப்பிரசாதங்களிலும் மிக முக்கியமானது 22பணியாளர்களை பாராளுமன்ற காலம் முழுமையும் பணிக்குஅமர்த்தமுடியும் என்பது. உங்களது தனிப்பட்ட நலன்களுக்குவெளியே 22 குடும்பங்கள் பயன்பெறக் கூடிய வரப்பிரசாதம்இது.
வடக்கில் நீங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் வன்னியின் 3மாவட்டங்களுமே யுத்தத்தில் அதிக அழிவுகளையும்இழப்பையும் சந்தித்த மாவட்டங்கள் ஆகும்.அங்குள்ளபாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த தகுதி உடைய 20 பேருக்குஉங்களால் வேலை வழங்க முடியும்.. ஏனையவரப்பிரசாதங்களில் மாவட்டங்களின் அபிவிருத்திக்கு ஒருபகுதியை வழங்க முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்ஒரு கட்சியின் தலைவர், விடுதலை இயக்கம் ஒன்றின்தலைவர்... 3 முறை பாராளுமன்ற சென்ற ஒரு உறுப்பினர்...என்ற வகையில் முன்னுதாரணமாக நடந்து கொள்ளுவீர்களா?உங்களது வெளிப்படைத் தன்மையை உங்களுக்கு வாக்களித்தமக்களுக்கு தெரியப்படுத்துவீர்களா?
இப்படிக்கு
நடராஜா குருபரன்..
“நாட்டின் உயரிய சபைக்கு நீங்கள் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
இலக்கை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை சபாநாயகருக்கு வழங்கும்'' என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற செயலாளர்...
உள்ளக விசாரணையை நிராகரித்தது வடமாகாண சபை! முதல்வரின் அதிரடித் தீர்மானம்!
இன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது.
வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகின.
இந்தநிலையில் சபையின் வாயிற் பகுதியில் மாகாண சபை உறுப்பினர்...
சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போதைய நிலையில் இணைந்தே செல்ல வேண்டும்.
சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போதைய நிலையில் இணைந்தே செல்ல வேண்டும்.
மிக நீண்ட காலமாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் அரசியல் பிரதிநிதிகள், அதாவது தமிழ் மக்களின் தாயக பூமியென பெயரிடப்பட்டுள்ள தமிழீழத்தின் தமிழ்...
இரண்டாவது முறையாக மைத்திரி- மஹிந்த-ரணில் ஒரே நிகழ்வில்!
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார காலம் முழுவதும் விசேடமாக மஹிந்த ராஜபக்சவும் ரணில் விக்ரமசிங்கவும் ஆளுக்காள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதன் போது இடைநிலையாக இருந்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாகும்.
அவர்கள் அரசியல் மேடைகளினுள் வெளியிட்ட...
மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராகின்றார்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு்:-
மஹிந்த ராஜபக்சவும் நாமல் ராஜபக்ஸவும் பாராளுமன்றிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக செல்பீ ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர்:-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினாகின்றார்.
முதல் வரிசையில் இரண்டாம் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஸ அமர்ந்துள்ளார்.
முதல்...
கருணா அடித்த பெல்டி: கோட்டபாய: தொலைபேசியில் கெட்டவார்த்தையால் திட்டி தீர்த்தார் !
தலைவர் பிரபாகரனை ராணுவம் கைது செய்து பின்னர் கொன்றது என்று ஊடகங்களுக்கு கூறிவந்தார் கருணா. இந்தக் கூற்று தமிழர்கள் மத்தியில் அவரை அவருவருக்கத் தக்க மனிதராக காட்டியது. ஆனால் சிங்களப் பகுதியில் கோட்டபாய...