DRS தொழில்நுட்பம் அனைவரையும் விரக்தியடையச் செய்வதாகவே நான் கற்பனை செய்துகொள்கிறேன் – டிம் பெய்ன்

220

DRS தொழில்நுட்பம் தன்னை விரக்தியடையச் செய்ததாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலிய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் DRS தொழில்நுட்பம் எனும் நடுவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முறை, அவுஸ்திரேலிய அணிக்கு தலைவலியாக இருந்தது.

குறிப்பாக ரஹானே, புஜாரா ஆகியோர் இந்த முறையின் மூலம் அவுட்டில் இருந்து தப்பினர். இந்நிலையில், DRS தொழில்நுட்பம் குறித்து அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘DRS தொழில்நுட்பம் சரியானது அல்ல. இந்த தொழில்நுட்பத்தில் எனக்கு பதில்கள் கிடைக்கவில்லை. இது விரக்தியடையச் செய்கிறது. அனைவரையும் இது விரக்தியடையச் செய்வதாகவே நான் கற்பனை செய்துகொள்கிறேன்.

DRS தொழில்நுட்பத்தில் பல பந்துகள் ஸ்டெம்புகளுக்கு மேலே செல்வதாகவே காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் அது போன்று நிகழாது என்பது எனக்கு தெரியும்.

பந்துவீச்சு மற்றும் களத்தில் உள்ள கண்ணோட்டத்தில் இருந்து எங்களுக்கு ஒரு செயல்முறை உள்ளது. அதன் வழியேதான் நானும், பந்துவீச்சாளர்களும் செல்கிறோம். நாதன் லயன் பந்தின் உயரம் குறித்த தகவல்களை தருகிறார்.

நீங்கள் எல்லோருடைய தகவலையும் எடுத்துக்கொண்டு சிறந்த முடிவுகளை கொடுக்க வேண்டும். இருமுறை எங்களுக்கு தவறான தீர்ப்பு கிடைத்தது. ஆனால் இது நடக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

SHARE