DSP ஆக நியமனம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா.., 3 கோடி ரூபாயும் பரிசு

114

 

இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை தீப்தி ஷர்மா துணைக் காவல் கண்காணிப்பாளராக (Deputy Superintendent of Police) நியமிக்கப்பட்டுள்ளார்.

Deepti Sharma
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக Deepti Sharma உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021 -ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.

இதனைதொரந்து 2014 -ம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலும், 2016 -ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இவர், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

DSP ஆக நியமனம்
இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநில அரசு துணை காவல் கண்காணிப்பாளர் என்ற உயரிய பதவியை Deepti Sharma -வுக்கு வழங்கியுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருக்கு வழங்கினார். மேலும் இவருக்கு, 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து Deepti Sharma கூறுகையில், “ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் சிறந்து விளங்கியதற்காக அங்கீகரிப்பட்டு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால் காவல் துறையில் நான் டிஎஸ்பி யாக நியமிக்கப்பட்டேன். எப்போதும் நன்றியுடன் இருப்பேன்” என்றார்.

SHARE