iPhone X கைப்பேசியின் தொடுதிரை இயங்கவில்லையா? ஆப்பிள் தரும் அதிரடி சலுகை

214

ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசியானது பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதற்கு முக்கியமான காரணமாக ஏனைய ஆப்பிள் கைப்பேசிகளின் அளவினை விடவும் பாவனைக்கு சௌகரியமான அளவில் வடிவமைக்கப்பட்டிருந்தமை காணப்படுகின்றது..

எவ்வாறெனினும் இக் கைப்பேசியின் தொடுதிரை முறையாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது பல பயனர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதனால் ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் நம்பிக்கையை தக்க வைப்பதற்காக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதன்படி முற்றிலும் இலவசமான முறையில் தொடுதிரை பிரச்சினை கொண்ட கைப்பேசிகளினை திருத்தி கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இச் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கு ஆப்பிள் ஸ்டோர் அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவிப் பிரிவினரை தொடர்புகொள்ள வேண்டும்.

SHARE