iPhone X கைப்பேசியில் மீட்டெடுக்க

259

iPhone X கைப்பேசியில் முற்றாக அழிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் ஹேக் செய்து மீட்டெடுக்கப்பட்டமை ஐபோன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐபோன்கள் பொதுவாக பாதுகாப்பு கூடியவை எனும் கருத்து கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஆனால் இக் கருத்தினை இருவர் சேர்ந்து பொய்ப்பித்து இருக்கிறார்கள்.

டோக்கியோவில் இடம்பெற்ற Mobile Pwn2Own எனும் போட்டியின்போதே Richard Zhu மற்றும் Amat Cama ஆகியோர் இந்த அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளனர்.

ஐபோனில் காணப்படும் சபாரி இணைய உலாவியின் ஊடாகவே கைப்பேசியில் ஊடுருவி அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டெடுத்துள்ளனர்.

இதனால் சபாரி இணைய உலாவியும் பாதுகாப்பு குறைவானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே இக் குறைபாடுகளை அடுத்துவரும் பதிப்புக்களில் ஆப்பிள் நிறுவனம் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

SHARE