இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 17வது ஐபிஎல் சீசனின் போட்டி அட்டவணைகளை இன்று வெளியிட்டுள்ளது.
IPL 2024 போட்டி அட்டவணை
இந்திய கிரிக்கெட் வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 17வது IPL 2024 சீசனுக்கான போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைத்து நடைபெறும் லோக்சபா தேர்தல் 2024ஐ கருத்தில் கொண்டு IPL 2024 சீசனின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற போட்டிகள் குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்
ஐபிஎல் 2024 மார்ச் 22ம் திகதி தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் மோத உள்ளன.
மேலும் ஐபிஎல் 2024ம் ஆண்டின் முதல் போட்டி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமான சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கும் என்றும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியும் மோத இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.