ISIS தீவிரவாதிகளால் சீரழக்கப்பட்ட பெண்கள்! பின்னர் சாதித்த கதை

298

ISIS தீவிரவாதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதிலிருந்து மீண்ட இரண்டு பெண்களுக்கு மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டுள்ளது

ஈராக்கில் கடந்த 2014ல் ISIS தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் போர் உச்சத்தில் இருந்த போது பல பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல பெண்கள் ISIS தீவிரவாதிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்.

அப்படி ஆளானவர்கள் தான் Nadia Murad (23) மற்றும் Lamiya Aji ஆகிய இரண்டு இளம் பெண்கள் ஆவர்.

அவர்கள் அதிலிருந்து தற்போது மீண்டு தங்கள் வாழ்க்கையை திறன்பட வாழ்ந்து வருவதை கவுரவிக்கும் வகையில் ஐரோப்பியாவின் பாரளுமன்றத்தில் இருவருக்கும் மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய Murad கூறுகையில், மொசூல் நகரில் போர் உச்சத்தில் இருந்த நேரம் அது. அப்போது தீவிரவாதிகள் எங்களையும் இன்னும் சில பெண்களை பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கி அவர்கள் அடிமையாக வைத்திருந்தார்கள்.

அந்த தீவிரவாத கும்பலிடம் நாங்கள் மரண வேதனையை அனுபவித்தோம் என கூறிய அவர், பின்னர் அங்கிருந்து எப்படியோ தப்பித்து ஜேர்மனி நாட்டிற்கு வந்தோம் என அவர் கூறியுள்ளார்.

தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் அவர்கள் வழக்கறிஞராக வேலை பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE