
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Galle Gladiators அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் மொவின் சுமசிங்க அதிகபட்சமாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் Carlos Brathwaite 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதனடிப்படையில் Kandy Falcons அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி 15 ஓவர்கள் நிறைவில் 5 இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் Jaffna Kings அணி சார்ப்பில் கமிந்து மென்டிஸ் 44 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
போட்டித் தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. – Ada derana tamil news