Mr.லோக்கல் படத்தை விமர்சிக்கும் ரசிகர்கள்

148

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr.லோக்கல் படத்தின் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தபோது அதில் சிவகார்த்திகேயனின் போஸ் ஜில்லா படத்தில் விஜய்யின் போஸ் போல இருந்தது என பலரும் ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் டீஸர் வெளிவந்து ஆன்லைனில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ரசிகர்கள் டீஸர் ஈர்த்தாலும் சிலர் இதை பற்றி விமர்சிக்கவும் துவங்கியுள்ளனர்.

ரஜினி-விஜயசாந்தி நடித்த மன்னன் படத்தின் கதையை அப்படியே எடுத்து இந்த படத்தினை எடுத்துள்ளார்களா என சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது.

SHARE