SLT-MOBITEL Booster 232 மற்றும் Social Lite பட்ஜெட் பக்கேஜ்களினூடாக புத்தாக்கமான வெகுமதிகள்

141

 

பாவனையாளர்களுக்கு வரையறைகளற்ற அழைப்புகள், சமூக ஊடக பாவனை மற்றும் இடைவிடாத chatting களுக்கு வலுச்சேர்த்திடும் வகையில், SLT-MOBITEL, இரு புதிய ‘Booster 232’ மற்றும் ‘Social Lite’ ஆகிய பக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, துறையில் புதிய நியமங்களை நிர்ணயித்துள்ளதுடன், முடிவில்லாத ஆனந்தத்தையும், ஒப்பற்ற இணைப்பையும் வழங்க SLT-MOBITEL முன்வந்துள்ளது.

SLT-MOBITEL மொபைல் வழங்கும் புதிய ‘Booster 232’ ஊடாக முடிவில்லாத சமூக வலைத்தள பாவனை, குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி திட்டங்கள் போன்றன வழங்கப்படுகின்றன. குறிப்பாக மூன்று புகழ்பெற்ற appகளான WhatsApp, Viber மற்றும் IMO ஆகியவற்றை இதற்காக பயன்படுத்த முடியும். பாவனையாளர்களுக்கு மேலதிகமாக 250 குரல் மற்றும் SMS பொதியையும் பெறுவார்கள். அத்துடன், 512 MB டேட்டாவையும் வரிகள் அடங்கலாக ரூ. 232 எனும் தொகைக்கு 30 நாட்களுக்கு பெறுவார்கள்.

‘Booster 232’ என்பது தற்போது முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதுடன், இலகுவாக செயற்படுத்திக் கொள்ளக்கூடிய செயன்முறையை கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் #170# டயல் செய்து, ‘Unlimited Social Media Plans’ என்பதை தெரிவு செய்ய முடியும். அதனைத் தொடர்ந்து ‘Nonstop Instant Messaging’ மற்றும் ‘Booster 232’ என்பதை தெரிவு செய்ய வேண்டும். ரூ. 232 தொகையை ரீலோட் செய்து உடனடியாக செயற்படுத்திக் கொள்ளவும் முடியும். SLT-MOBITEL Self-Care Appகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு ‘Unlimited Social Media Plans’ என்பதை தெரிவு செய்து அதனையடுத்து ‘Booster 232’ என்பதை தெரிவு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட செயற்படுத்தல்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

SLT-MOBITEL மொபைலின் புதிய ‘Social Lite’ பக்கேஜ் செலுத்தும் தொகைக்கு பெறுமதி சேர்த்திடும் வரையறையற்ற சமூக வலைத்தள பாவனையை வழங்கும் தீர்வாகும். Facebook, Instagram, LinkedIn, Twitter, WhatsApp, Viber மற்றும் IMO ஆகியவற்றை வரிகள் அடங்கலாக ரூ. 215 எனும் தொகைக்கு பயன்படுத்த முடியும். இதனை செயற்படுத்திக் கொள்வது இலகுவானதாகும், #170# டயல் செய்து, ரீலோட் அல்லது SLT-MOBITEL Self-Care Appகளை பயன்படுத்தி இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம். ‘Social Lite’ என்பது 30 நாட்களுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் என்பதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் செயற்படுத்திக் கொள்ள முடியும்.

SLT-MOBITEL மொபைலின் புதிய சிக்கனமான தீர்வுகள், பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு ஒப்பற்ற பெறுமதியை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளன. மேலதிக தகவல்களுக்கு www.sltmobitel.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

 

SHARE