Smartphoneக்கு திடீர் விலை குறைப்பை அறிவித்தது சாம்சங் நிறுவனம்!

60

 

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை இந்தியாவில் அதிரடியாக குறைத்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டுள்ளதோடு 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் ரூ. 2 ஆயிரம் குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. A22 5ஜியில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 48MP பிரைமரி கெமரா, 8MP செல்பி வசதிகள் உள்ளது.

அதன் புதிய விலை சாம்சங் கேலக்ஸி A22 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17 ஆயிரத்து 999 சாம்சங் கேலக்ஸி A22 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 19 ஆயிரத்து 999 மாற்றப்பட்ட புதிய விலை சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

SHARE