T20 மற்றும் ஒருநாள் தொடரும் இந்திய அணி வசம்

150

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான நேற்று (12) இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அறிமுக வீரர் நுவனிந்து பெர்னாண்டோ 50 ஓட்டங்களை பெற்றார்.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி ​கைப்பற்றியுள்ளது.

SHARE