TNPL: இறுதி போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

225

 

தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் கோவை அணியை வீழ்த்தி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் தமிழகத்தில் முதல் முறையாக ஐ.பி.எல் பாணியில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2 வது அரையிறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவை கிங்ஸ் அணியை எதிர் கொண்டது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதை தெரிவு செய்தது.

இவ்வணியின் தொடக்க ஆட்டக்காரர் கோபிநாத் (42 ஓட்டங்கள்) மற்றும் 3 வது ஆட்டக்காரர் வி.சரவணன்(52 ஓட்டங்கள்) ஆகியோர் அதிரடியாக ஆட அணி ஓட்ட விகிதத்தில் முன்னேறிச் சென்றது. இறுதியில் சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, 162 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சூர்ய பிரகாஷ், அனிரூத் சீதாராமன் சிறந்த துவக்கததை கொடுத்த நிலையிலும் மற்ற ஆட்டக்காரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க கோவை அணியின் ஓட்ட விகிதம் குறையத் தொடங்கியது.

பின்பு, இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூர் கில்லீஸ் அணி கோவை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதையடுத்து இன்று சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் தூத்துக்குடி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

SHARE