தமிழ் சினிமா மக்களுக்கு பிடித்தமான நிறைய பாடல்கள் இருக்கும், அதில் முக்கியமாக இவரது குரலில் வந்த பாடல்கள் கண்டிப்பாக இருக்கும், அவர் வேறுயாரும் இல்லை பாடகி சின்மயி தான்.
ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் அறிமுகமாக அதன்பிறகு சின்மயி பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் லிஸ்ட் தான். அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் அவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
திருமணம்
சின்மயி 2013ம் ஆண்டு முதல் நடிகர் ராகுல் என்பவரை காதலித்து வந்தார். பின் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.
இந்த நிலையில் இருவருக்கும் தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளார்கள். அவர்களின் புகைப்படங்களுடன் குழந்தைகளின் பெயர்களோடு இந்த சந்தோஷ செய்தியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் சின்மயி.
இதோ அவர்களது அழகிய குழந்தைகளின் புகைப்படங்கள்,