Xiaomi Mi 8 கைப்பேசியின் சிறப்பம்சங்கள்

215

Xiaomi நிறுவனம் Mi 8 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 6.2 அங்குல அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதனுடன் Qualcomm Snapdragon 845 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, தலா 16 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்கள், 3300 mAh மின்கலம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இக் கைப்பேசியானது இம் மாதம் 31ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

SHARE