அமெரிக்க அதிபர் சிறிலங்காவுக்கு வருகை தருவதை தாம்  எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வொசிங்டனில் உள்ள அனைத்துலக அமைதிக்கான கார்னெகி அறக்கட்டளையில், ‘அதிபர் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா’ என்ற தலைப்பில், நேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று  அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெரியை சந்திக்கும் போது, சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளேன். வெள்ளிக்கிழமை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்திக்கும் போது, அவரையும்...
  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விரிவான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைதுசெய்ய வேண்டாம் என புதிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரபல போதைப் பொருள் வியாபாரியான வெலே சுதாவின் வாக்குமூலத்தின் அடிப்படைடையில், துமிந்த சில்வாவை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தயாராகினர். அப்படி செய்ய வேண்டாம் என அரசாங்கத்தின்...
  இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக நன்மை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது பிழையானது என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. விக்னேஸ்வரன் அவ்வாறு செய்வது நியாயமற்றது. மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் விக்னேஸ்வரன் பிழை. நான் அதனை அவருக்கு ஞாபகப்படுத்துகின்றேன். தரைவழி போரை...
  அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிக்கொணரக் கோரியும் யாழ். நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. 'குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே!', 'காணாமற்போனோர், கடத்தப்பட்டோரின் விவரங்களை வெளிப்படுத்து!' , 'அரசியல் கைதிகளை விடுதலை செய்!' ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிஸ கட்சி இந்தப் போராட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தது. -
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருக்கு நெருக்கமான பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் தெராலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அந்த மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். சிறிது நேரம் ஜனாதிபதியுடன் உரையாடிய பின்னர், ஜனாதிபதியின் மனைவியிடம் பேச மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மனைவியுடன் இந்த நேரத்தில் பேச முடியாது எனவும் அவர் சமையலறையில் மதிய உணவை தயார் செய்து...
  வடக்கில் காணிகளை விடுவிப்பதாக மாயையான செயற்பாடுகளை காட்டி மக்களை ஏமாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுமென அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஆயிரம் ஏக்கர் காணியினை விடுவிப்பதாகவும் அவற்றில்...
  ,சாகடிக்கப்பட்ட சகோதரனுக்காக கண்ணீர் சிந்துங்கள் சிங்கள காடையர்களால் தமிழ் இளஞ்சனை அடித்து கொண்றார்கள் உறவுகளே கண்ணீர் சிந்துங்கள் காரணம் கேளுங்கள் நாங்கள் தமிழர்கள் எத்தனை நாளைக்குத்தான் சிங்களவனின் கொடுங்கோல் ஆட்சியை பொறுப்பது ,கடந்தவாரம் கொழும்பில் பம்பலப்பிட்டிக் கடற்கரையில் பல்லாயிரக்ககணக்கான மக்கள் முன்னிலையில் மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் சீறிலங்காவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் சில சிங்களக் காடையர்கள் சிலருடன் சேர்ந்து கட்டைகளால் தாக்கி கடலில்...
  பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில். முதற்கட்டமாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வலவாய் கிராம சேவைப்பிரிவு...
  தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடல் என்று காட்டியது, கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை சேர்ந்த ஒருவருடைய உடல்...... இந்தக் காணொளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தொப்பி போட்ட இலங்கை இராணுவ வீரரை மட்டும் உற்று நோக்குங்கள்.. இலங்கை இராணுவமும் அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலமென்று காட்டிய உருவத்துடன் இவர் பொருந்துகிறாரா இல்லையா?? … என்பதை சிந்திக்கவே இந்தக் காணொளியை பகிர்ந்துள்ளோம். உங்கள் பார்வைக்கு, மிகவும் அவதானமாக பாருங்கள். // Post by...
  வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு குறித்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். , ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய போதே அவர், இதுகுறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்புக் குறித்து வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தகவல் வெளியிடுகையில், வடக்கு மாகாணசபையினால்,...