அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் எனவும், பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களுக்கு தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும், புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின நிகழ்வு, மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (27.03.2024) நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு...
  திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் 15 நாட்கள் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானத இன்று (27) முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், 4 மணி தொடக்கம் அவசர சிகிச்சை பிரிவு ஆரம்பமாகவுள்ளதுடன் ஏனைய பிரிவுகள் நாளை வழமைக்கு திரும்பவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் கடந்த11ஆம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய...
  ரணில் விக்ரமசிங்கவினால் கடந்தவாரம் வலிகாமம் வடக்கில் படையினர் வசமிருந்த காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து குறித்த காணி நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் மக்களுக்கு அவற்றை முன்னெடுப்பதற்கான ஏதுநிலைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. விடுவிக்கப்பட்ட காணி நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதேச மக்களை அழைத்து அவர்களின் எண்ணப்படுகளை...
  நாட்டை வீணடித்த, நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,'' நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர். இந்த நாட்டில் ஊழல்வாதிகள் இவ்வாறான கள்வர்களை பாதுகாக்கின்றனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மணல்கொள்ளையர்கள், கப்பம் பெறுவோர் தரமற்ற மருந்து இறக்குமதி செய்பவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர். தேர்தல் இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல்...
  நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே நுரையீரலில் பல் காணப்பட்டதாக பலாங்கொடை அவசர மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்துள்ளார். பலாங்கொடை வலேபொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரின் பிரேதப் பரிசோதனையிலேயே இவ்வாறு பல் காணப்பட்டுள்ளது. நிமோனியா மற்றும் சிறுநீரக நோயால்...
  அருட்தந்தை ஒருவர் தான் விரைவில் சுட்டுக் கொலை செய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளமை கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அருட்தந்தையர்களுக்கான விசேட திருப்பலி ஒன்று ஆயர் தலைமையில் மட்டக்களப்பு ஆயரில்லத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் அருட்தந்தை ஒருவர் தனக்கு ஆயரில்லத்தில் உள்ள சிலரால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் குறித்து அருட்தந்தையர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டதுடன் என்னை துப்பாக்கி முனையில் கொலை செய்யப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். இது குறித்து...
  வந்துரப்ப பிரதேசத்தில் தம்பதியினர் திடீரென உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகலவத்தை, வந்துரப்ப பிரசேதச்தில் வசிக்கும் 59 வயதுடைய வன்னி ஆராச்சிகே உபாலி டயஸ் மற்றும் அவரது மனைவி சந்திரிகா அமரசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும் வாந்தி பேதியால் கணவன்,மனைவி தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த நிலையில், கணவன் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மனைவி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அமைதியற்ற சூழல்நிலை ஏற்படுமானால் அது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். சட்டம் ஒழுங்கு அதன்படி, பெந்தர, அஹூங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் அமைதியான சூழலில்...
  பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மருதமுனை மதரஸா ஒன்றில் மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சூடான காலநிலையில் நீண்ட நேரம் வெளியே செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு போன்றவை அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் மருதமுனை மதரஸா மெளலவி ஒருவர் சிறு வயதை உடைய மானவர்களுக்கு இவ்வாறான சித்திரவதை ஒன்றை மேற்கொண்டுள்ளார். புனித ரமழான் மாதத்தில் நோன்பாளியாக...
  தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் காலி கராபிட்டிய பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த மருத்துவமனைக்கு ஜேர்மன் - இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை என பெயரிடப்பட்டுள்ளது. ஜேர்மன் அரசின் உதவியுடன் இந்தக் வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமி பேரிடருக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டன. மருத்துவ வசதிகள் கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளமையினால், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏனைய பெண்களுக்கும் மிகவும் வசதியாக...