விபசாரத்திற்கு எதிரான தண்டனையாக பெண்களை பொது வெளியில் அடிப்போம் இவை ஜனநாயகத்திற்கு எதிரானவை, என்றாலும் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம், என தலிபான் அமைப்பின் தலைவர் தெரிவித்ததுள்ளார். தலிபான் அமைப்பின் தலைவர் மேற்கத்திய கலாசாரத்திற்கு எதிராக போர் அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அந்நாட்டு தொலைகாட்சியில் ஆடியோ வெளியிட்ட தலிபான் தலைவர் மேற்கத்திய மனித உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் தீய சக்தியின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அவர்களை...
  15-ம் நூற்றாண்டில் பிரான்ஸில் வாழ்ந்த தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துப் பல துல்லியமான கணிப்புகளைச் செய்துள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம், ஹிரோஷிமா குண்டுவெடிப்பு மற்றும் நெப்போலியனின் எழுச்சி ஆகியவற்றை சரியாகக் கணித்தார். இவர் 2024-ம் ஆண்டு முடியாட்சிக்கு கடினமான காலகட்டமாக இருக்கும் என்று கணித்து இருந்தார். நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு நடந்துவிடுமா? அதுபோன்று இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மருமகள் இளவரசி கேத் மிடில்டன் ஆகியோர் புற்றுநோயால்...
  கனடாவின், சஸ்கற்றுவானில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் வயது வந்தவர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் மரணங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  தானியங்கி அடிப்படையில் வரி கோப்புக்களை பதிவு செய்வதாக கனடிய மத்திய அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரித்துறைசார் நிபுணர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். வரிச் செலுத்துகைக்கு உட்படாதவர்களின் விபரங்களைக் கொண்டு அரசாங்கம் தானாகவே வரிக் கோப்புக்களை பதிவு செய்யும் பரீட்சார்த்த முயற்சி குறித்து அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும், இந்த உறுதிமொழி இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் இந்த விடயத்தை தெரிவித்திருந்தது. இவ்வாறு வரிக்...
  ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ இசை அரங்கத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் சதி இருப்பதாக ரஷ்ய உளவுத் துறை குற்றம் சாட்டியுள்ளது. உளவு பாதுகாப்புத் துறை தலைவர் அலெக்ஸாண்டர் போர்ட்டினிகோவிடம் தாக்குதலின் பின்னணி குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் தாக்குதல் குறித்து , தங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இத்தகைய கேள்வி எழுவதாகவும் அவர் கூறினார்.
  அமெரிக்காவின் பால்டிமோர் நகரம் அருகே, சரக்கு கப்பல் மோதி உடைந்த பாலத்தில் இருந்து ஆற்றில் தவறி விழுந்தவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆற்றில் மூழ்கிய இரண்டு பேரை கடலோர காவல்படையினர் மீட்டிருப்பதாகவும் 8 பேரை காணவில்லை என்றும் தெரிவித்தார். ஆற்றை கடக்க முடியாமல் 20 கப்பல்கள் மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக...
  காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார். இந்நிலையில்...
  வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கில் 52 பேர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 8 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4...
  நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் இன்றி வாழ முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகள் இன்றி வாழ்க்கையை முன்னெடுக்கத் தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுமக்கள் பிரதிநிதி பொதுமக்கள் பிரதிநிதியாக தெரிவாவதற்கு முன்னதாக வாழ்ந்த வாழ்க்கையைப் போன்றே வாழ முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின்...
  மாணவர்களுக்கு உணவு வழங்கும் விவகாரத்தில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தங்காலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய பகல் உணவுத் திட்டம் இல்லாதொழிக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அரசாங்கம் உணவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமது...