ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிகளவில் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு களவாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரங்களில் ஈடுபடுவோர் இந்த நடவடிக்கைகளினால் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் சுமார் 300 சிறு வியாபார நிறுவனங்களின் விற்பனை இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன.இவ்வாறான களவுச் சம்பவங்களினால் சில நிறுவனங்கள் 50,000 டொலர்கள் வரையில்...
  தென் மேற்கு லிபியாவின் பாலைவனப்பகுதியில் ஒரே குழியினுள் அடக்கம் செய்யப்பட்ட 65 புலம்பெயர் மக்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வு நிறுவனம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அவர்களின் இறப்புக்கான காரணம் மற்றும் அவர்கள் எந்த நாட்டினர் என்பது தொடர்பான தரவுகள் எதுவும் இல்லை என்றும் ஆனால் அவர்கள் பாலைவனத்தின் வழியாக மத்திய தரைக்கடலை நோக்கி கடத்தப்பட்ட நிலையில் இறந்ததிருக்கலாம் என்றே நம்புவதாக...
  முதல்முறையாக அமெரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு அமைப்பான 'அமுல்', பால் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி இந்தியாவின் அமுல், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் மத்திய மேற்கு சந்தைகளில் பால் விற்பனை செய்ய, 'மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன்' ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 50 நாடுகளுக்கு பால் பொருட்கள் ஏற்றுமதி இதன் வாயிலாக, இந்தியாவின் பால் கூட்டுறவு வரலாற்றிலேயே முதன்முறையாக, அமுல் நிறுவனத்தின் பால் தான் அமெரிக்காவில் விற்கப்பட உள்ளமை விசேட அம்சமாகும்....
  ரஷியாவில் இசை அரங்கில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று (24) ஒரு நாள் முழுவதும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தன. ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் இசை அரங்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவில் பிக்னிக் என்ற பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இசை நிகழ்ச்சி தாக்குதலில் 137 ஆக உயர்ந்த...
  அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு - மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.சுசந்திகா என்ற 18 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணைகள் உறவினர்களுடன் அம்பாந்தோட்டைக்குச் சுற்றுலா சென்ற மேற்படி மாணவி, கடலில் குளித்த போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டதுடன் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சடலம், அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
  மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசைத் தோற்றுவித்தார்கள். நல்லாட்சி அரசு நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் மத்திய வங்கியை மோசடி செய்து, பொருளாதாரப் பாதிப்புக்கு வித்திட்டது. நல்லாட்சி அரசின்...
  ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால், தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று(24.03.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். உயிர் தியாகம் மேலும் கூறுகையில், வெறுக்கத்தக்க உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத செயலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறியதான் நான் உட்பட 220 இலட்சம் மக்கள் காத்திருக்கும் நிலையில்,...
  தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அது பற்றிப் பேசுவதற்காக மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளார். குறித்த தகவலை தெற்கு ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. தேர்தல் விடயங்கள் மேலும், மே மாதத்துக்குப் பின்பே தேர்தல் விடயங்கள் சூடு பிடிக்கும் என்றும், அப்போது கூட்டணி அமைப்பது தொடர்பில் செயலில் இறங்குவதே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  குற்றக்கும்பல் உறுப்பினர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் ஐந்து பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மினுவாங்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெப்ரவரி 16 ஆம் திகதி மினுவாங்கொடை பொரகொடவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய...
  பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் அந்தரங்கப்படங்களை போலியாக தயார் செய்து அவரை மிரட்டிய நிலையில் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்கு இரகசியமாக நுழைந்து பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபர், குறித்த பெண்ணிடம் காதலிக்குமாறு கேட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் ஆனால் அவர் மறுத்துள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு லிங்க்...